Latest Updates
-
நவம்பர் 06-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பண மழை கொட்டப்போகுது! -
1/4 கிலோ கடலை மாவு இருந்தா, தீபாவளிக்கு 1 கிலோ சாப்ட்டான பூந்தி லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
நவம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப் போடுங்க.. அப்ப தான் லட்சுமி தேவியின் அருள் கிட்டும்! -
November 2026 Tarot Predictions: உங்க பிறந்த தேதிப்படி நவம்பர் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? -
ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்! -
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான்
இந்த 4 ராசிகளில் பிறந்தவங்க எடுக்கும் முடிவு எப்போதும் சரியானதாக இருக்குமாம்... இவங்கள கண்ண மூடிட்டு நம்பலாம்!
ஜோதிட உலகில் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அவர்களுக்கென தனித்துவமான குணங்களையும், திறமைகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும் அவர்கள் எடுக்கும் சில முடிவுகளே முக்கிய காரணமாக இருக்கும். சிலர் தவறான முடிவுகளால் தோல்வியை தழுவும் போது சிலர் சரியான முடிவுகளால் வாழ்க்கையில் முன்னேறுவதுடன் மற்றவர்களையும் வழிநடத்துவார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு சக்திவாய்ந்த உள்ளுணர்வும், உள்ளார்ந்த ஞானமும் இருக்கும். அதனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியானதாகவும், வெற்றியைக் கொடுப்பதாகவும் இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியானதாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் மற்றும் அனைத்து விஷயத்தையும் தீர ஆலோசித்து முடிவெடுப்பவர்கள். அவர்களின் பகுப்பாய்வு திறனால் கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவர்களின் முறையான அணுகுமுறை மற்றும் தீர்வுகளை கணிக்கும் அவர்களின் உள்ளார்ந்த திறன் சரியான முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது. கன்னி ராசிக்காரர்கள் தங்களுக்குத் தேவையான உண்மைகளை மற்றவர்களிடமிருந்து பிரித்தெடுப்பதில் கில்லாடிகள். அவர்களின் துல்லியமான மதிப்பீடுகள் மற்றும் சரியான தீர்ப்புகள் அவர்களை எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்க வைக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கம் மற்றும் எதார்த்த அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் அசைக்க முடியாத கவனம் மற்றும் உறுதியுடன், அவர்கள் பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு பலனளிக்கும் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் சாத்தியமான தடைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றைக் கடக்க பயனுள்ள திட்டங்களை வகுப்பதில் திறமை கொண்டவர்கள். அவர்களின் பணிவான இயல்பு மற்றும் வாழ்க்கையின் சவால்கள் மீதான ஒழுக்கமான அணுகுமுறை சிக்கலான சூழ்நிலைகளை வழிநடத்துவதில் அவர்களை எப்போதும் சாரியானவர்களாக மாற்றுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் தீவிர உள்ளுணர்வு மற்றும் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் மனித உணர்ச்சிகள் மற்றும் உந்துதல்களைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர், இதனால் அவர்கள் மக்களையும், சூழ்நிலைகளையும் துல்லியமாக மதிப்பிட முடியும்.
சிக்கலான சூழலுக்கு இடையில் உள்ள வாய்ப்புகளை பார்க்கும் அவர்களின் உள்ளார்ந்த திறன் உண்மையைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது., மறைக்கப்பட்ட ரகசியங்களை வெளிக்கொணர்வதில் அவர்கள் எப்போதும் முதலிடத்தில் இருப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள், புதுமையான யோசனைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அவர்களின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை பெரும்பாலும் மற்றவர்கள் எடுக்க முடியாத முடிவுகளை அவர்களை எடுக்க வைக்கிறது. கும்ப ராசிக்காரர்கள் சமூக நீதியின் உள்ளார்ந்த உணர்வையும், மனிதர்களின் செயல்பாடுகள் பற்றிய விதிவிலக்கான புரிதலையும் கொண்டுள்ளனர்.
இதனால் அவர்கள் விளைவுகளை கணிப்பதிலும், பெரிய நன்மைகளை வழங்கும் முடிவுகளை எடுப்பதிலும் திறமையானவர்களாக மாறுகிறார்கள். அவர்களின் முற்போக்கான சிந்தனையும், தனித்துவமான கண்ணோட்டங்களும் சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களை எப்போதும் சரியான நபர்களாக மாற்றுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

