Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த 4 ராசிக்காரர்களிடம் இருக்கும் மோசமான குணத்தால் இவங்கள யாருக்குமே பிடிக்காதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில தனிப்பட்ட பலமும், பலவீனங்களும் இருக்கும். அனைவருமே ஒரு விதத்தில் நல்லவர்களாக இருந்தாலும் சிலருக்குள் மோசமான குணங்கள் அதிகமாக இருக்கும். சிலரிடம் மற்றவர்களை வெறுப்பேற்றி கோபப்படுத்தும் குணங்கள் அதிகமாக இருக்கும். அது மோசமான பிடிவாதமாகவோ, ஆபத்தான கோபமாகவோ அல்லது இரக்கமின்றி விமர்சிக்கும் குணமாகவோ இருக்கும்.
இந்த ராசிகளில் பிறந்தவர்களிடம் மற்றவர்களை வெறுப்பேற்றும் குணம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். அவர்கள் சில சமயங்களில் தெரிந்தோ, பல சமயங்களில் தெரியாமலோ மற்றவர்களை காயப்படுத்துவார்கள் அல்லது எரிச்சலூட்டுவார்கள். சிலசமயங்களில் அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை புண்படுத்தும் என்று தெரிந்தே அதை செய்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்களிடம் மற்றவர்களை எரிச்சலூட்டும் குணங்கள் அதிகமாக இருக்குமென்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் இரட்டை ஆளுமைகளுக்குப் பெயர் பெற்றவர்கள். கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படுவதால், அவர்கள் ஒரு நிமிடம் வசீகரமானவர்களாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் அடுத்த நிமிடமே முடிவெடுக்கத் தெரியாதவர்களாகவும், அமைதியற்றவர்களாகவும் மாறிவிடுவார்கள்.
அவர்களின் இந்த அடிக்கடி மாறக்கூடிய மனநிலை மற்றவர்களுக்கு எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும். நீங்கள் அவர்களுடன் இருந்தால் அவர்கள் எப்போது எப்படி செயல்படுவார்கள் என்று கணிக்கவே முடியாது. இது அனைவரையும் விரக்திக்கு ஆளாக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களும் புதனால் ஆளப்படுகிறார்கள், அவர்கள் புத்திக்கூர்மைக்கும், உயர் தரநிலைகளைக் கொண்டிருப்பதற்கும் பெயர் பெற்றவர்கள், இது அவர்களை அதிகமா விமர்சனம் செய்யக்கூடியவர்களாக மாற்றக்கூடும். அவர்கள் நல்ல எண்ணத்துடனேயே செயல்பட்டாலும், அவர்களின் தொடர்ச்சியான குறை கண்டுபிடிக்கும் பழக்கமும், அனைத்தும் சரியாக இருக்க வேண்டுமென்ற என்ற தேவையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் பொறுமையை சோதிக்கும்.
பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்ற அவர்களின் ஆசை பெரும்பாலும் அதிகப்படியான குறைகளை கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கிறது, இதனால் அவர்கள் கடுமையாக விமர்சிப்பவர்களாகவோ அல்லது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவோ மாறக்கூடும். எனவே அவர்களுடன் நெருங்கி பழகுவது என்பது கடினமானது.
மேஷம்
செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் தைரியமானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்று அறியப்படுகிறார்கள். இருப்பினும், அவர்களின் அவசர குணமும், காரணமில்லாத கோபமும் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. மேஷ ராசிக்காரர்கள் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அவசரமாகச் செயல்படுவார்கள், இது தவறான முடிவுகள் அல்லது பொறுப்பற்ற நடத்தைக்கு வழிவகுக்கும்.
அவர்களின் தவறான முடிவு அவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அவர்களின் போட்டி மனப்பான்மை காரணமாக, அவர்கள் தோற்பதை வெறுக்கிறார்கள், மேலும் மோதல்களின் போது அவர்களின் முன்கோபம் காரணமாக அனைவரையும் காயப்படுத்துவார்கள்.
விருச்சிகம்
செவ்வாய் மற்றும் புளூட்டோவால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள், தங்கள் தீவிரத்திற்கும் பேரார்வத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இருப்பினும், அவர்களின் ரகசியமான குணமும் அதிகாரப் பசியும் அனைவரையும் விரக்தியடையச் செய்யலாம். விருச்சிக ராசிக்காரர்கள் சந்தேகமும் பொறாமையும் கொண்டவர்களாக இருப்பார்கள், பெரும்பாலும் அவசரப்பட்டு முடிவெடுப்பார்கள் அல்லது நீண்ட காலத்திற்கு மனக்கசப்புகளை மனதில் வைத்திருப்பார்கள்.
அவர்களின் மன்னிக்காத காரணமும், சூழ்நிலைகளைக் கையாளும் போக்கும் அவர்களை நம்புவதைக் கடினமாக்குகிறது. வெளிப்படையாக, சமநிலையான உறவுகளை விரும்புபவர்கள் அவர்களுடன் ஒரு நாள் கூட இருக்க முடியாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












