Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
Today Rasi Palan 24 ஜூலை 2025: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப பொறுமையா இருக்கணும்... இல்லனா பிரச்சினைதான்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி வியாழக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். காலை நேரத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தம் செய்வதன் மூலம் லாபம் சம்பாதிக்கலாம். இன்று நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். மேலும், சில புதிய பொறுப்புகளையும் பெறலாம். உங்கள் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறிது கவனம் அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
ரிஷபம்
இன்று நீங்கள் சாதாரண நாளை எதிர்பார்க்கலாம். உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம். குடும்ப உறுப்பினரின் உடல்நிலை மோசமடையக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில் உங்கள் முயற்சிகளை மற்றவர்கள் மட்டம்தட்டும் சூழல் ஏற்படலாம். வணிகம் வழக்கம் போல் இருக்கும், ஆனால் நிதி கவலை அதிகரிக்கும். எந்த வேலையையும் கவனத்துடன் செய்ய வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்டம் நிறம் கருப்பு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் பணியிடத்தில் ஏதேனும் சர்ச்சைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டால், அதை உங்கள் திறமையால் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். பல வேலைகளை புத்திசாலித்தனத்துடனும் விவேகத்துடனும் முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிக்கப்படலாம். மற்றவர்களைப் பற்றி தேவையில்லாமல் பேசாதீர்கள். வியாபாரத்தில் யாரிடமும் கடன் வாங்கக்கூடாது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக வெளியே செல்லலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான பலன்களைத் தரும். செல்வத்தை ஈட்டுவதற்கான புதிய வாய்ப்புகளை கண்டறிவீர்கள், உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், இது உங்களுக்கு புதிய நம்பிக்கையைத் தரும். உங்கள் வீட்டிற்கு சில விருந்தினர்கள் வருகை தரலாம். வேறொருவரின் வார்த்தைகளின் அடிப்படையில் குடும்ப மோதல்களைத் தூண்டுவதைத் தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான சூழ்நிலைகள் உங்கள் பொறுமையைச் சோதிக்கும், நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் ஒருவரால் பண இழப்பை ஏற்படலாம். ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது இழப்புகளைத் தடுக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் சில மோதல்கள் ஏற்படக்கூடும். நீங்கள் விஷயங்களை விவேகத்துடன் கையாளாவிட்டால் மன பதற்றம் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சூழ்நிலைகள் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் உங்களின் கணிப்புகள் துல்லியமாக செயல்படும், சில காலம் உங்களுக்கு எதிராக இருந்தவர்களும் உங்களுக்கு ஆதரவாக வருவார்கள். அதிக செலவு அல்லது கடன் வாங்குவதை தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் நிதி நிலைமை மோசமடையலாம். குடும்பத்துடனான உறவுகள் வலுவடையும், அவர்களுக்கு தேவையான உதவிகளை முழுமனதுடன் செய்வீர்கள். இந்து உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
விருச்சிகம்
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில்ரீதியாக நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலை விஷயத்தில் பெற்றோர் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கலாம். சட்ட விஷயங்களில் கவனமாகவும் விழிப்புடனும் இருக்கவும். அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கும். நீண்ட கால வியாபாரத் திட்டங்கள் வேகம் பெறும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான நல்ல வாய்ப்பை இன்று பெறுவார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் அதிக வேலைப்பளுவை அனுபவிப்பார்கள். உங்கள் தொழிலில் சில புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துவீர்கள். உங்கள் பழைய தவறு வெளிச்சத்திற்கு வரலாம். நிதி தொடர்பாக தேவையற்ற மன அழுத்தத்தை நீங்கள் உணரலாம். இன்று கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மோசமான நாளாக இருக்கும். நீங்கள் அவசரமாக பணிகளை முடிக்க நேரிடும், இது சிக்கல்களை அதிகரிக்கக்கூடும். நீங்கள் எந்த வேலையையாவது மற்றவர்களிடம் விட்டுவிட்டால், அதை முடிப்பது சவாலானதாக மாறக்கூடும். உங்கள் குழந்தைகளின் படிப்பில் கவனமாக இருங்கள், ஏனெனில் அவர்கள் கெட்ட சகவாசத்தால் பாதிக்கப்படலாம். மற்றவர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது சிக்கல்களை ஏற்படுத்தும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அதை நிறைவேற்றுவதில் உங்களுக்கு சிக்கல்கள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறையலாம். நிதி நிலையில் கவனம் செலுத்த வேண்டும். புதிய சொத்து, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில நெருக்கமானவர்களால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க கவனத்துடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சில கூடுதல் செலவுகள் ஏற்படும். சொத்து சம்பந்தமான சட்ட விவகாரத்தில் உங்களுக்கு சாதகமாக முடிவுகள் ஏற்படும். வேலையில் உங்கள் மேலதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுவது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











