Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இன்றைய ராசிபலன் 20 டிசம்பர் 2025: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி சனிக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
இன்று உங்களின் புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைத் தரும். பிரச்சினைகள் முடிவுக்கு வருவதால் மன அமைதி திரும்பும். வேலை காரணமாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களுடன் ஒரு மகிழ்ச்சியான பயணத்தைத் திட்டமிடலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளைப் புறக்கணிக்காதீர்கள். உங்கள் பெற்றோருக்கு சேவை செய்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். பழைய கடன் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக பதட்டமாக உணரலாம், அதே நேரத்தில் உங்கள் குடும்பத்தைப் பாதிக்கும் ஆரோக்கிய பிரச்சினைகளையும் எதிர்பார்க்கலாம். பருவகால நோய்கள் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதிக்கலாம். மேலும், உங்கள் வணிகம் மந்தநிலையை சந்திக்க நேரிடும், மேலும் சில கெட்ட செய்திகள் உங்களைத் தேடிவரலாம். இன்று அமைதியாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மிதுனம்
இன்று வணிகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் ஒரு பெரிய விஷயம் உங்கள் கைகளில் இருந்து நழுவக்கூடும். உத்தியோகஸ்தர்கள் அதீத தன்னம்பிக்கைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த நீங்கள் கடினமாக உழைத்தால், விரைவில் வெற்றி பெறலாம். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறலாம். இருப்பினும், நீங்கள் அத்தகைய கவனக்குறைவாக இருக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கடகம்
இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்களுக்காக சில பொருட்களை வாங்கலாம். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காவிட்டால், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். விரைவில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் காணப்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
சிம்மம்
இன்று மோதல்கள் மற்றும் தவறான புரிதல்கள் நிறைந்த சவாலான நாளுக்கு தயாராக இருங்கள். அற்பமான விஷயங்களுக்காக வாக்குவாதங்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் எழலாம், இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு இன்று பணிச்சுமை நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும் மற்றும் எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்று உங்களுக்கு அதிஷ்ர்ஷ்டமான நிறம் சிவப்பு.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் டென்சன் குறையும். கூட்டு வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறவுகளில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். பணியிடத்தில் உங்கள் உடன் வேலை செய்வோர் வேலையில் உங்களுக்கு முழுமையாக உதவுவார். நீங்கள் ஒரு புதிய சொத்தில் முதலீடு செய்ய திட்டமிடலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சில மனக்கவலைகள் மற்றும் குடும்ப பிரச்சினைகளால் ஒரு கலவையான நாளை அனுபவிக்கலாம். இருப்பினும், வணிகம் இலாபம் அளிப்பதாக இருக்கும். நாள் முழுவதையும் பயன்படுத்த, உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துவது நன்மை பயக்கும் என்பதால், உங்கள் தகவல்தொடர்புகளில் கவனம் செலுத்துவது அவசியம். எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருப்பதன் மூலம், இன்றைய சவால்களை நீங்கள் எளிதில் கடக்கலாம் மற்றும் உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் அடையலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கலாம். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். ஒருவருடன் திடீரென ஏற்படும் தகராறு உங்களைப் பதட்டப்படுத்தக்கூடும். அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்கள் தங்கள் முயற்சிகளை மனஉறுதியுடன் தொடர வேண்டும். வியாபாரிகள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
தனுசு
இன்று உங்களின் புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைத் தரும். பிரச்சினைகள் முடிவுக்கு வருவதால் மன அமைதி திரும்பும். வேலை காரணமாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களுடன் ஒரு மகிழ்ச்சியான பயணத்தைத் திட்டமிடலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளைப் புறக்கணிக்காதீர்கள். உங்கள் பெற்றோருக்கு சேவை செய்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். பழைய கடன் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் செலவுகளை கவனமாக திட்டமிட வேண்டும். இருப்பினும், உங்கள் வருமானம் அதிகரிக்கும், இது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய பிரச்சினைகள் இருந்தால், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். புதிய சொத்து வாங்க நீங்கள் திட்டமிடலாம். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வதந்திகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காதீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கடந்த கால பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதங்கள் காரணமாக பதட்டங்கள் ஏற்படலாம். உங்கள் தந்தையின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். உங்கள் நிதித் திட்டங்கள் பலனளிக்கும். புதிய முதலீடுகள் செய்வது உங்களுக்கு பலனளிக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் நிதி ஆதாயங்கள் தேடிவரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும். உங்களின் கடந்த கால ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். திடீர் உறவினரின் வருகை உங்கள் இல்லத்தை உற்சாகமாக மாற்றும். ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் சில புதிய எதிரிகள் தோன்றலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











