Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
Today Rasi Palan 04 December 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் சிந்தித்து செய்யணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று எந்த ஒரு வேலையிலும் அவசரம் காட்டினால், அதில் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. புதிய எதிரிகள் உருவாகலாம். பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். உங்கள் பெற்றோர் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று ஒன்றன் பின் ஒன்றாக நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். உங்கள் பிள்ளையின் வேலை குறித்த கவலை இருந்தால், அது நீங்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினருடன் வெளியே செல்ல திட்டமிடலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். வணிகம் தொடர்பான கூட்டு ஒப்பந்தங்களால் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும். வீட்டைப் புதுப்பிக்க நிறைய தொகையை செலவிடுவீர்கள். உங்கள் தாயுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு முடிவையும் விவேகத்துடன் எடுத்தால் அது நல்லது. முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் யாரையும் அதிகம் நம்பாதீர்கள், இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குழந்தைகள் உங்கள் மீது கோபம் கொள்வார்கள். வீட்டிற்கு புதிய வாகனத்தை வாங்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள எந்த ஒரு வேலையும் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். பயணங்களால் சில நன்மைகளைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு நிறைய மருத்துவ செலவை செய்ய வேண்டியிருக்கும். பழைய நோய்கள் மீண்டும் வரலாம். சிறு பிரச்சனைகளுக்காக வாழ்க்கைத் துணையிடம் தேவையில்லாமல் சண்டையிடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இது உங்கள் பதற்றத்தை அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்திப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று எந்த காரியத்தையும் சிந்தனையுடன் செய்ய வேண்டும். உங்களுடைய வேலையை விட மற்றவர்களின் வேலைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள், இது பணியிடத்தில் பிரச்சனைகளை உருவாக்கும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் கொஞ்சம் யோசித்து முதலீடு செய்ய வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்கள் செல்வம் பெருகப் போகிறது. நிலுவையில் உள்ள எந்தவொரு வேலையும் முடிவடையும். பண விஷயத்தில் ஏதேனும் வேலை நிலுவையில் இருந்தால், அதையும் எளிதாக முடிப்பீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அதை திரும்ப பெறுவது கடினமாகிவிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று சுமாராகவே இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர் செல்ல நேரிடும். உங்களுக்கு பிடித்த பொருட்களை இழந்திருந்தால், அதைப் பெறலாம். எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வார்கள், அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். மூன்றாம் நபர் சொல்வதை நீங்கள் நம்பினால், அது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே மோதலை ஏற்படுத்தக்கூடும். நிலுவையில் உள்ள பணத்தைப் பெற வாய்ப்புள்ளதால், உங்கள் பொறுப்புகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











