Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
Today Rasi Palan 01 December 2024: டிசம்பர் முதல் நாளான இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. அஸ்வதி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திறமை மேம்படும். இன்று உங்கள் வேலையைத் திட்டமிட்டு செய்ய வேண்டும். இல்லையெனில் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். வேலை தொடர்பாக வெளியே பயணம் செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தில் சொத்து சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வானிலை காரணமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாராக இருக்கும். குடும்பப் பொறுப்புகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். அவசர முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். கவனக்குறைவால் சிரமப்படுவீர்கள். வியாபாரத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், அது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாராக இருக்கும். குடும்ப வாழ்வில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வீட்டிற்கு புதிய விருந்தினரின் வருகையால் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும், இல்லையெனில் விபத்து ஏற்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆனால் குடும்ப உறுப்பினர்களிடையே சில தவறான புரிதல்கள் ஏற்படலாம். அதைப் பேசி தீர்க்க வேண்டும். வேலையை மாற்ற நினைத்தால், அதை மாற்றலாம். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருந்தால், பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். யோசித்த பின் கடனை வாங்க வேண்டும். இல்லாவிட்டால் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று மாணவர்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்களைச் சுற்றி வாழும் மக்களின் விஷயங்களில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். எந்த குடும்ப விஷயமும் உங்களை வீட்டை விட்டு வெளியே வர விடாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்துவீர்கள். வேலைகளால் உடல் சோர்வை சந்தித்தால், அது இன்று சரியாகும். மற்றவர்களைப் பற்றி தேவையில்லாமல் பேசக்கூடாது. வேலை சம்பந்தமாக அனுபவசாலிகள் ஏதேனும் ஆலோசனைகளை வழங்கினால், நீங்கள் அதை நிச்சயமாக செயல்படுத்துவீர்கள். இன்று உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று சாதகமான நாளாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். இன்று உங்கள் வேலையில் அவசரப்படுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவற்றில் ஏதேனும் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. ஆடம்பர விஷயங்களிலும் முழு கவனம் செலுத்துவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று ஒன்றன் பின் ஒன்றாக நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். உங்கள் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நனலாகும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று பெரிய முதலீடு செய்ய திட்டமிடலாம். பணியிடத்தில் பெண் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் பிள்ளைகள் படிப்பில் சந்திக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வு காண்பீர்கள். உங்கள் வேலை டென்சன் நிறைந்ததாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். சில புதிய வேலைகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கலாம். உங்கள் போட்டியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்கள் சோம்பலை கைவிட்டு முயற்சித்தால் உங்கள் இலக்கை அடைவீர்கள். ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியத்தை தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். இழந்த பணத்தை திரும்ப பெறுவீர்கள். ஆனால் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய வீடு வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்களின் மன உறுதி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications