Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகியுள்ள 3 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்..
Three Rajyogas In Capricorn After 100 Years: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களும் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மகர ராசியில் 3 ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகியுள்ளன. அதில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும், புதன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகமும், செவ்வாய் உச்ச ராசியில் இருப்பதால் ருச்சக ராஜயோகமும் உருவாகியுள்ளன.

முக்கியமாக இந்த 3 ராஜயோகங்களும் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளன. இந்த ராஜயோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனை போல் பிரகாசித்து, வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் உருவாகியுள்ள மூன்று ராஜயோகங்களால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த சில நாட்கள் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். எடுத்த ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். முன்றேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிர்ஷ்ட வீடான 9 ஆவது வீட்டில் 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும், லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் 3 ராஜயோகங்கள் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் உடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்தால், எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறலாம். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
