Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
விசுவாவசு தமிழ் புத்தாண்டு 2025: தனுசு முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
Tamil Puthandu Rasi Palan 2025: ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும், அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். இது ஆங்கில புத்தாண்டிற்கு மட்டுமின்றி, தமிழ் புத்தாண்டிற்கும் பொருந்தும். பொதுவாக தமிழ் மாதங்களானது சூரியன் ராசியை மாற்றும் போது பிறக்கின்றன.
அதில் சூரியன் மேஷ ராசிக்கு செல்லும் போது தான் புதிய ஆண்டு பிறக்கிறது. தமிழ் வருடங்கள் மொத்தம் 60 ஆகும். இதில் 39 ஆவது ஆண்டு தான் விசுவாவசு ஆண்டு. இந்த புதிய ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை மாதத்துடன் பிறந்தது.

விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்த நேரத்தில் ஒன்பது கிரகங்களின் சஞ்சாரம், பார்வையை பொறுத்து தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 4 ஆம் வீட்டில் அமர்ந்து அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்யும் சனிபகவான் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சில சங்கடங்களை ஏற்படுத்துவார் கவனம் தேவை. பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போவதால் குரு பலன் வந்து விட்டது.
திருமண சுப காரியங்கள் கைகூடி வரும் நல்ல வேலை கிடைக்கும். போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு வருமானம் கொட்டப்போகிறது. ராகு உங்கள் ராசிக்கு 3 ஆம் வீட்டிலும் கேது உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டிலும் பயணம் செய்யப்போவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் ஆன்மிக பயணங்கள் அதிகரிக்கும்.
மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இதுநாள்வரை ஏழரை சனியாக ஆட்டி படைத்து வந்த சனிபகவான் உங்களை விட்டு விலகி விட்டார். 3 ஆம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் சனிபகவான் உங்களுக்கு நிறைய அள்ளித்தரப்போகிறார். வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும் கடன்கள் அடைபடும். குருவின் பயணம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வரப்போவதால் கடன் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
கேட்ட இடத்தில் கடன் கிடைக்கிறதே என்று மாட்டிக்கொள்ளாதீர்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண யோகம் கைகூடி வரும். ராகு இரண்டாம் வீட்டிற்கும் கேது உங்கள் ராசிக்கு 8 ஆம் வீட்டிற்கும் செல்வதால் வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்து குடும்ப சனியாக பயணம் செய்யும் சனிபகவான் ஏழரை சனியில் பாத சனியாக தொடர்வதால் பயணங்களில் நிதானம் தேவை. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பது நல்லது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டில் பூர்வ புண்ணிய குருவாக அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் பண வருமானம் அதிகரிக்கும்.
குரு பலன் வரப்போவதால் திருமண யோகம் கைகூடி வரும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு அதிசாரமாக பயணம் செய்யும் குருபகவான் ராசிக்கு ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். ராகு ஜென்ம ராசியிலும் கேது ஏழாம் வீட்டிலும் அமர்ந்து பயணம் செய்யும் காலத்தில் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு தலைமேல் அமர்ந்து சனிபகவான் ஜென்ம சனியாக பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கித்தர வேண்டாம். குரு பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யப்போவதால் சுகமும் சந்தோஷமும் ஏற்படும்.
அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் அதிசாரமாக 5ஆம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து பயணம் செய்யப்போவதால் திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறும். ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டிலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டிலும் அமர்ந்து பயணம் செய்யும் காலத்தில் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வரப்போகும் வருமானத்தை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
