Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
100 ஆண்டுகளுக்கு பின் பூரம் நட்சத்திரத்தில் இணையும் சூரியன்-சுக்கிரன்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கபோகுது..
Sun Venus Conjunction In Pooram Nakshatra After 100 Years: ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர நட்சத்திரங்களையும் மாற்றிக் கொண்டிருக்கின்றன. அப்படி மாற்றும் போது சில சமயங்களில் ஒன்றிணைந்து பயணிக்க நேரிடும் மற்றும் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி சூரியன் பூரம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் உள்ளார். மேலும் பூரம் சுக்கிரனின் நட்சத்திரமும் கூட. சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இப்படியான சேர்க்கை நிகழவுள்ளதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

மேலும் நிதி நிலையில் எதிர்பாராத உயர்வு ஏற்படவுள்ளது. அதோடு திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இப்போது சூரிய சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை பிரமாதமாக இருக்கும். ஆளுமை மேம்படும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் சில புதிய திட்டங்களைப் பெறுவார்கள். இந்த திட்டங்கள் நல்ல லாபத்தைத் தருவதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திடீரென்று கைக்கு வந்து சேரும். அவ்வப்போது நிதி ஆதாயங்களையும் பெறக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையானது நல்ல பலனைத் தரும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஆர்டர்களால், இருமடங்கு லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். உங்களின் திட்டங்கள் நல்ல வெற்றியைப் பெறும். வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கவும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் செயல்திறனும் மேம்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குழந்தைகளின் முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தல் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications