Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்
2026 தொடக்கத்தில் மகர ராசியில் நிகழும் சூரிய-சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு வெற்றியும், செல்வமும் குவியும்!
Sun Venus Conjunction In Capricorn 2026: இன்னும் ஓரிரு வாரங்களில் 2026 ஆம் ஆண்டில் நுழையப் போகிறோம். இந்த ஆண்டின் தொடக்கமே மிகவும் அற்புதமானது. ஏனெனில் புத்தாண்டின் முதல் மாதத்திலேயே பல்வேறு சுப யோகங்கள் உருவாகின்றன. அதுவும் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், அசுரர்களின் தலைவனாக கருதப்படும் சுக்கிரனும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.
இதில் சூரியன் தன்னம்பிக்கை, கௌரவம், தந்தை, பதவி மற்றும் அரசு வேலை ஆகியவற்றின் காரணியாவார். அதே சமயம் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இதில் சூரியன் ஜனவரி 15 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் தான் சூரியன் சுக்கிரனுடன் ஒன்றிணையவுள்ளார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான்.

இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவதோடு, மகத்தான வெற்றியையும், செல்வத்தையும் தரும். இப்போது மகர ராசியில் நிகழும் சூரிய சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
2026-ல் மகர ராசியின் முதல் வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். சொத்து பிரச்சனைகள் தீர்ந்து கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
மேஷம்
2026-ல் மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடனான உறவு மேம்படும். பங்குச் சந்தை, ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மீனம்
2026-ல் மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும். பங்குச் சந்தை, லாட்டரியில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
