Latest Updates
-
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சூரியன் துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் நிதிநிலை தாறுமாறா ஏறப்போகுதாம்...!
அறிவியலின் படி கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனும் ஒரு கிரகமாகவே கருதப்படுகிறது. மேலும், சூரியன் கிரகங்களின் ராஜகவாகவும் கருதப்படுகிறது. ஆன்மா, செழிப்பு, ஆற்றல் மற்றும் அந்தஸ்து போன்றவற்றை சூரியன் வழங்குகிறார். ஒவ்வொரு மாதமும் சூரியன் தனது ராசியை மாற்றுகிறது, இந்த மாற்றங்கள் அனைத்து ராசியினரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது சூரியன் விருச்சிக ராசியில் இருக்கிறார், அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் துலாம் ராசியை அடைகிறார். துலாம் சுக்கிரன் ஆட்சி செய்யும் ராசியாகும். இந்த ராசி மாற்றம் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இவர்களின் அதிர்ஷ்ட கால அக்டோபர் 17 முதல் தொடங்கவுள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிகாரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியனின் இந்த பெயர்ச்சி நன்மை தரும். மேஷ ராசியின் 7ம் வீட்டில் சூரியன் மாறப்போகிறார். இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியான காலகட்டத்தை அனுபவிப்பார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்கும்.
வேலை செய்யுமிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு வேலைகள் சிறப்பாக நடக்கும். பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும் காலம் இது, பொருளாதார நிலை மேம்படும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 6ம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். அதனால் அவர்கள் நினைத்த அனைத்தையும் சாதிக்க முடியும். பணியில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள், உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல யோசனைகள் செயல்படுத்தப்பட்டு பொருளாதாரரீதியாக பலன் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் மற்றும் வியாபாரிகள் இருவரின் நிதி நிலையுமே மேம்படும். இது திருமணத்தில் துணைக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தரலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5-வது வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். இது மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இந்த காலகட்டத்தில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், இது மனதிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தரும். இந்த காலகட்டத்தில் பல புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரலாம். இந்த காலகட்டம் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான காலமாகும்.
தொழில் வளர்ச்சியுடன் நிதி ஆதாயமும் உண்டாகும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். காதலில் இருப்பவர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும், திருமணமான தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

