Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
சூரிய பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் சவால்கள் நிறைந்ததா இருக்கும்.. கவனமா இருங்க..
Sun Transit In Cancer 2025: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். கடக ராசிக்கு சூரியன் நுழைந்ததால், தமிழ் மாதமான ஆடி மாதம் பிறந்துள்ளது. இந்த கடக ராசியில் சூரியன் ஆக்ஸ்ட் 17 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார்.
சூரியன் கடக ராசியில் நுழைந்ததால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் காணக்கூடும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இப்போது கடக ராசிக்கு சென்றுள்ள சூரியனால் ஆகஸ்ட் 17 வரை எந்த ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்று பாருங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிலையற்ற தன்மை, ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். சூரியனின் மோசமான தாக்கத்தை தவிர்க்க, 'ஓம் சூர்யய நமஹ' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும். எனவே பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் கடுமையாக பேசாதீர்கள். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். சூரியனின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க, 'ஓம் த்ருணே சூரியாய நமஹ' என்ற மந்திரத்தை தினமும் சொல்வதோடு, வெல்லம் அல்லது கோதுமையை தானம் கொடுங்கள்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். கருத்து வேறுபாடுகளை அதிகம் சந்திக்க நேரிமும். தொழிலில் இழப்புக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மூட்டு அல்லது எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இக்காலத்தில் சூரியனின் மோசமான தாக்கத்தைக் குறைக்க தினமும் சூரிய யந்திரத்தை வணங்கி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லத்தை தானம் செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் வயிறு அல்லது தோல் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும். நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். மன அழுத்தத்தால் அவதிப்படக்கூடும். பயணங்களை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் சூரியனின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க, தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை பெறக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதல்களை சந்திக்க நேரிடும். வேலையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதோடு பண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சூரியனின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க தினமும் ஒரு சிவலிங்கத்திற்கு பால் அல்லது தண்ணீர் நிவேத்யம் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications