Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும்
சூரியன் மேஷ ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வேத ஜோதிடத்தில் சூரியன் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாகும், சூரியபகவான்தான் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சூரியனின் ஆசி இருந்தால் அவர்கள் வாழ்வில் பல சாதனைகளை செய்ய முடியும். அவர்கள் வாழ்க்கையில் செல்வமும், வளமும் பெருகும்.
தற்போது, தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் நுழையப் போகிறார். இந்த சூரியப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் உள்ள துன்பங்களை விரட்டப்போகிறது மற்றும் அவர்களுக்கு எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறது.

வரப்போகும் ஒரு மாத காலம் அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டகாத்து பலமாக அடிக்கப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சூரியன் மேஷ ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டமடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் கும்ப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அடையப்போகிறார்கள். நீங்கள் தற்போது அனுபவித்து வரும் மனரீதியான பிரச்சினைகள் நீங்கும். பதட்டங்கள் குறைந்து வாழ்க்கையில் அமைதியான சூழல் நிலவும். ஆரோக்கியம் பற்றி இருந்து வந்த கவலைகள் நீங்கும். பொருளாதாரநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். வேலை தேடுபவர்கள் புதிய வேலையில் நுழைந்து அதில் சிறந்து விளங்க வாய்ப்பு கிடைக்கும்.
மேஷம்
சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவதால், மேஷ ராசிக்காரர்களின் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உங்கள் சேமிப்பை சரியான முறையில் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மன ஆரோக்கியம் மேலோங்குவதால், அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த பணக்கஷ்டத்தை சூரியபகவான் முடிவுக்குக் கொண்டுவரப்போகிறார். பல சாதனைகளை செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் இதுவரை இல்லாத லாபத்தை அடையும் வாய்ப்புகள் உருவாகும், இதனால் வருமானம் விரைவாக அதிகரிக்கும். அலுவலகப் பணியில் இருப்பவர்கள் நிறைவான சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். அவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள்.
சிம்மம்
சூரியன் மேஷ ராசிக்கு செல்வதால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பிய சாதனைகளை அடைய வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் எதிர்கொண்ட முக்கிய தடைகள் நீங்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய உச்சத்தை அடைய அவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான ஆசைகளில் ஒன்று இப்போது நிறைவேறும். மாணவர்களுக்கும் பொன்னான நாட்கள் வரவிருக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

