Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்!
சூரிய சந்திர சேர்க்கையால் உருவாகும் அமாவாசை யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
Amavasya Yog 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் வரை இருந்து, பின் ராசியை மாற்றுவார். அந்த வகையில் தற்போது சூரியன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் மிதுன ராசியில் நுழைந்துள்ளார். இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் அமாவாசை யோகம் உருவாகிறது.
ஜோதிடத்தில் அமாவாசை யோகம் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. இந்த யோகத்தால் சந்திரன் பலவீனமாக இருந்து, ஒருவரது உணர்ச்சிகளை பாதிப்பார். இந்த அமாவாசை யோகம் ஜூன் 26 ஆம் தேதி வரை இருப்பதால், இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாகவும், சிலருக்கு மிகவும் மோசமாகவும் இருக்கும். அதுவும் இந்த யோகத்தால் மன அழுத்தம் அதிகரிப்பது, பண இழப்பு அல்லது எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இப்போது சூரிய சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள அமாவாசை யோகத்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் சூரிய சந்திர சேர்க்கையால் அமாவாசை யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வீட்டு சூழல் பதட்டம் நிறைந்ததாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும். வாகனம் ஓட்டும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பெரிய அளவில் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு இக்காலம் சற்று மோசமாக இருக்கும். பொறுமையுடன் இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டில் சூரிய சந்திர சேர்க்கையால் அமாவாசை யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகரிக்கலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீட்டு சூழல் பதட்டம் நிறைந்ததாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் நிறைந்திருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தொந்தரவு செய்யக்கூடும். இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆனுல் மன ரீதியாக வலுவாக இருப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டில் சூரிய சந்திர சேர்க்கையால் அமாவாசை யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் திடீர் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பார்கள். தவறான முடிவுகளால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். பயணங்களை மேற்கொள்ளும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் பொருட்கள் தொலைந்து போகலாம் அல்லது திருடப்படலாம். உங்கள் முன் இனிமையாக பேசுபவர்கள் உங்களுக்கு பின் எதிராக செயல்படுவார்கள். எனவே இக்காலத்தில் மற்றவர்களிடம் பழகும் போது சற்று எச்சரிக்கையாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
