Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
12 மாதம் கழித்து விருச்சிகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Trigrahi Yog In Scorpio 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பலவிதமான சுப யோகங்களையும், ராஜயோகங்களையும் உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவம்பர் மாதத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.
அதே சமயம் அந்த விருச்சிக ராசியில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் பயணித்து வருகின்றனர். இதன் விளைவாக விருச்சிக ராசியில் சூரியன், புதன், செவ்வாயின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

வேத நாட்காட்டியின் படி, சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் விருச்சிகத்தில் திரிகிரக யோகம் மட்டுமின்றி, சூரியன் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும், சூரியன் செவ்வாய் சேர்க்கையால் மங்கள ஆதித்ய ராஜயோகமும் உருவாகவுள்ளது.
இப்படி 3 ராஜயோகங்கள் ஒரே வேளையில் ஒரே ராசியில் உருவாவது சிறப்பானது. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக, செழிப்பாக இருக்கப் போகிறது. இப்போது விருச்சிகத்தில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முதலீடுகளை செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள காலமாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். இருப்பினும் கோபம் சற்று அதிகமாக வரும். அதை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய தொழிலை தொடங்க இது சிறந்த காலமாக இருக்கும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வங்கி கடனுக்காக காத்திருந்தால், அதுவும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் எதிரிகளை வெற்றிகரமாக தோற்கடிப்பீர்கள். கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, ஆரோக்கியம் மேம்படும். வருமானம் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். படைப்புத் துறையில் இருப்பவர்களின் புகழ் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications