Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
100 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் உருவாகும் சக்திவாய்ந்த யோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
Trigrahi Yog 2025 In Leo After 100 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
கிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் சிம்ம ராசியில் கேது, சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் காரணமாக திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்வதாக கூறப்படுகிறது.
இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இதன் விளைவாக தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. நிதி ரீதியாக உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் கேது, சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருக்கும். வாழ்வில் புதிய சாதனைகளைப் புரிவீர்கள். கலை, எழுத்து போன்ற துறையில் இருப்பவர்களின் திறமை மேம்படும். வெற்றிகள் குவியும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் கேது, சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் நடத்தையும், பேச்சும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை முடிப்பீர்கள். பணியிடத்தில் நடக்கும் பிரச்சனைகளை திறம்பட கையாண்டு, அந்த பிரச்சனையை தீர்ப்பீர்கள். ஒவ்வொரு வேலையையும் கவனமாக செய்வீர்கள். மார்கெட்டிங், ஊடகம் மற்றும் இசைத் துறையுடன் தொடர்புடையவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது, சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் போடும் திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல பலனைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்து முயற்சித்தால், நல்ல பலன்களைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications