12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: ராஜவாழ்க்கை வாழ போறது இந்த 3 ராசிக்காரங்க தான்...

Guruaditya Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி மங்களகரமான ராஜயோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் ஜூன் மாதத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும் மிதுன ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

அதுவும் இந்த சேர்க்கையானது ஜூன் மாதம் 15 ஆம் தேதி நிகழவுள்ளது. ஏனெனில் ஜூன் 15 ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். அப்போது இந்த மிதுன ராசியில் குரு பகவான் இருப்பார். இதனால் குரு மற்றும் சூரியனின் சேர்க்கையால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்த ராஜயோகம் மிதுன ராசியில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

Sun Jupiter Guruaditya Rajyog Zodiac Luck June 2025

இந்த ராஜயோகம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, செல்வம் மற்றும் சொத்துக்களில் மகத்தான உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது குரு ஆதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிதாக திருமணம்செய்திருன்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் நல்ல பெயரையும், புகழையும் சம்பாதிப்பீர்கள். திடீர் நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. காதல் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும். காதலித்து வந்தால், திருமணம் செய்யும் சூழல் உருவாகும்.

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். புதிய திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த நல்ல பலனைப் பெறுவீர்கள். ஆனால் அவசரமாக எந்த முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் நல்ல நிதி லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்ய வாய்ப்புக்களைப் பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதோடு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன. சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். திருமணமானவர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion