Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்..
Solar Eclipse 2026: ஆகஸ்ட் மாதத்தில் 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் நிகழவுள்ளது. அதுவும் இந்த சூரிய கிரகணமானது ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை நாளில் நிகழ்வுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த கிரகணம் கடக ராசியிலும் ஆயில்யம் நட்சத்திரத்திலும் நிகழ்கிறது. இப்படி உருவாகும் கிரகணத்தின் தாக்கம் சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிலும், தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிலும், கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிலும் விழுகிறது. இந்த 3 ராசிகளின் வீடுகளும் திரிகோண வீடுகளாகும்.

பொதுவாக திரிகோண வீடுகளில் கிரகணத்தின் தாக்கம் மிகவும் மோசமானதாக இருக்கும். அதுவும் இதன் தாக்கமானது தொழில், நிதி, ஆரோக்கியம் போன்றவற்றில் பெரிய அளவில் காணப்படும். சொல்லப்போனால் எதிர்பாராத இழப்புக்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது திரிகோண வீடுகளில் நிகழும் சூரிய கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்தும், எந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் சூரிய கிரகணத்தின் தாக்கம் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இந்த செலவுகளை கவனித்து தேவையற்றதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் செலவுகளால் நிதி நெருக்கடியை அதிகம் சந்திக்க நேரிடும்.
வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்பவர்கள் தங்கள் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கவனக்குறைவு உங்களுக்கு பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் கோபம் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். சூரிய கிரகணத்தின் மோசமான தாக்கத்தை தவிர்க்க சூரிய மந்திரங்களை பாராயணம் செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் சூரிய கிரகணத்தின் தாக்கம் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையை திடீரென்று நிறுத்தக்கூடும். வேலையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதையோ அல்லது பெரிய நிதி முதலீடுகளை செய்வதையோ தவிர்ப்பது நல்லது. பண பரிவர்த்தனைகளை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தவறான நபர்களுடன் பழகுவது உங்கள் நேரத்தையும், பணத்தையும் தான் வீணாக்கும். சூரிய கிரகணத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்க விஷ்ணு பகவானின் மந்திரங்களை பாராயணம் செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் சூரிய கிரகணத்தின் தாக்கம் இருப்பதால், பணியிடத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலையில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட முயற்சிக்க வேண்டும்.
வியாபாரிகள் அவசரப்பட்டு எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நஷ்டங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு மற்றும் இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. சூரிய கிரகணத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



