Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சூரிய கிரகண நாளில் உருவாகும் பஞ்சகிரக ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Panchgrahi Rajyog On Surya Grahan 2026: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி ராசியை மாற்றுகின்றன. அப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் 5 கிரகங்கள் ஒன்றிணைந்து பஞ்சகிரக ராஜயோகத்தை உருவாக்கவுள்ளன.
தற்போது கும்ப ராசியில் புதன், சுக்கிரன், ராகு, சூரியன் போன்ற கிரகங்கள் பயணித்து வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி சந்திரன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் கும்பத்தில் 5 கிரகங்கள் சேர்ந்து, பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த ராஜயோகம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் நாளில் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகம் 2 1/2 நாட்கள் வரை நீடித்திருக்கும்.

இப்படியான அரிய நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படவுள்ளது. இப்போது சூரிய கிரகண நாளில் உருவாகும் பஞ்சகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படவுள்ளது. திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். லட்சுமி தேவியின் ஆசியால் செல்வம் குவியும் வாய்ப்புக்கள் உள்ளன. வழக்கத்தை விட தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக, கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனைப் பாராட்டுவார்கள்.
வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன அமைதி அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றிகள் கிடைக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



