Latest Updates
-
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இந்த 5 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க..
Surya Grahan 2026: பிப்ரவரி மாதத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி நிகழவுள்ளது. முக்கியமாக இந்த கிரகணமானது கும்ப ராசியில் நிகழவுள்ளது. ஜோதிடத்தின் படி, இந்த சூரிய கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எதிரியாக கருதப்படும் சனி பகவானின் ராசியில் நிகழும் இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்வில் பல சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மேலும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியை சந்திக்கக்கூடும்.

வேத நாட்காட்டியின் படி 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி நிகழ்கிறது. அதுவும் இந்த கிரகணம் மாலை 5.31 மணிக்கு தொடங்கி இரவு 7.57-க்கு முடிவடையும். இப்போது 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எந்த ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். மேலும் இந்த சூரிய கிரகணமானது சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை குறையும். தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் உங்களின் செயல்பாட்டை கண்காணிப்பார்கள். எனவே கொடுக்கும் வேலையை கவனமாக செய்யுங்கள். இல்லாவிட்டால் கவனக்குறைவு உங்களுக்கு வேலையில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியக் கிரகணம் நிகழவுள்ளது. இதன் காரணமாக உங்கள் வேலையை கெடுக்க எதிரிகள் அதிக முயற்சி செய்வார்கள். இக்காலத்தில் யாரையும் நம்பாதீர்கள். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். நிலுவையில் உள்ள வேலையை மீண்டும் தொடங்க முடியாமல் சிரமப்படுவீர்கள். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசரமாக எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பெற்றோரின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். இக்காலத்தில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கெட்ட சகவாசத்திலிருந்து விலகி இருங்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திப்பீர்கள். மேலும் பண இழப்புக்களையும் சந்திக்கும் வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும் மற்றும் மன குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற மனக் கவலைகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பண பிரச்சனைகள் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வராமல் சிரமப்படுத்தும். தொழிலிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயங்களைக் கையாளும் போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். எலும்பு அல்லது வயிற்றுப் பிரச்சினைகள் பாடாய்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications