Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்.. ஏப்ரல் முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Shani Uday 2025: ஜோதிடத்தில் நீதியின் கடவுளாக கருதப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பதால், சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் அதிகமாக இருக்கும். என்ன தான் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றினாலும், அதற்கு இடைப்பட்ட காலத்தில் அவரது நிலைகளில் மாற்றங்களும் ஏற்படும்.
இந்த மாற்றங்களின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அருமையாகவும், இன்னும் சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். அந்த வகையில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லவுள்ளார். அதுவும் இப்படி பெயர்ச்சியாகும் போது அஸ்தமன நிலையில் தான் இருப்பார். இந்த நிலையில் ஏப்ரல் 06 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் உதயமாகவுள்ளார்.

குரு பகவானின் ராசியில் சனி பகவான் உதயமாவதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும், நிதி நிலையில் உயர்வு ஏற்படும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கலாம். இப்போது மீன ராசியில் உதயமாகும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இதன் மூலம் நல்ல ஆதாயமும் கிடைக்கும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகுள் நீங்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் செய்யும் வேலையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும், புகழும் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களின் உயர்கல்வி படிக்க வேண்டுமென்ற கனவு நனவாகும்.
திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வெற்றியும் குவியும். பணத்தை முதலீடு செய்ய நினைத்து முயற்சித்தால், நல்ல பலன் கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். பேச்சாற்றல் அதிகரிக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். இதன் மூலம் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications