Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சனி மகாதசையால் அடுத்த 19 வருடத்திற்கு இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Shani Mahadasha Effects Will Last For 19 Years: கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் தான் சனி. ஜோதிடத்தில் சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இதனால் இந்த சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலம் நீடித்திருக்கும்.
சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். அதுவும் ஒருவர் நல்ல செயல்களை செய்தால் ஆண்டியையும் அரசனாக்குவார். அதுவே மோசமான செயல்களை செய்தால் அரசனையும் ஆண்டியாக்குவார்.

சனியின் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி மட்டும் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. சனியின் மகாதசையும் ஒருவரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சனி மகாதசை காலத்தில் ஒருவர் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு சனி மகாதசை காலமானது அதிர்ஷ்டமாக இருக்கும்.
ஜோதிடத்தின் படி சனியின் மகாதசை காலமானது 19 ஆண்டுகள் வரை இருக்கும். இக்காலத்தில் மகாதசையின் பலன்களானது ஒருவரது செயல்களுக்கு ஏற்ப சனி பகவானால் வழங்கப்படும். பொதுவாக சனியின் மகாதசை காலத்தில் மோசமான பலன்கள் நிறைய கிடைக்கும். அதுவும் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும், வேலைகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், நீதிமன்ற வழக்குகளால் அலைய வேண்டியிருக்கும், எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சனி மகாதசையின் தாக்கம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும், சனியின் நிலை பொறுத்து வேறுபடும். அதில் கெடு பலன்கள் மட்டுமின்றி, நற்பலன்களையும் பெறக்கூடும். இப்போது சனி மகாதசையால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி மகாதசையால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆசியால் இக்காலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும், செல்வந்தர்களாகவும் மாறுவார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் குறைவாக பேசினாலும், அவர்களின் எழுத்துக்கள் மற்றவர்களை பேசவிடாமல் தடுக்கும். முக்கியமாக சனி மகாதசை காலத்தில் இந்த ராசிக்காரர்கள் புகழுடன் நல்ல பலன்களையும் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 4 மற்றும் 5 ஆம் வீட்டின் அதிபதி தான் சனி பகவான். சனி மகாதசையானது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிக சுயமரியாதையுடன், லட்சியத்தையும் கொண்டிருப்பார்கள். நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பார்கள். நிதி நிலையும் நன்றாக இருக்கும். மனதில் எவ்வித குழப்பங்களும் இல்லாமல் தெளிவான மனதுடன் எந்த ஒரு முடிவையும் எடுப்பார்கள் மற்றும் இந்த முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
தனுசு
தனுசு ராசியின் 2 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி. இந்த சனி மகாதசை காலத்தில் தனுசு ராசிக்காரர்கள் கடினமாக உழைப்பார்கள் மற்றும் நல்ல எண்ணங்களுடன் நிறைந்திருப்பார்கள். இதனால் கடின உழைப்புக்கான பலன் உடனே கிடைக்கும் மற்றும் சனி பகவானின் ஆசியால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
