சூரியன் மீது விழும் சனியின் அசுப பார்வையால் இந்த 3 ராசிக்காரங்க டிசம்பர் 15 வரை கவனமா இருக்கணும்..

Saturn's Bad Aspect On The Sun: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். இதனால் ஒவ்வொரு மாதமும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தைக் காண முடியும். மேலும் சூரியன் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.

அந்த வகையில் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். சூரியன் விருச்சிக ராசியில் நுழைந்ததால், சூரியனின் மீது சனி பகவானின் அசுப பார்வை விழுகிறது. இந்த பார்வையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

Saturn s Bad Aspect On The Sun These Zodiac Signs Should Be Careful Till 15 December 2024

அதுவும் சூரியன் இந்த விருச்சிக ராசியில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை இருப்பதால், சனியின் அசுப பார்வையின் தாக்கம் ஒரு மாத காலம் நீடித்திருக்கும். இப்போது சூரியன் மீது விழும் சனியின் அசுப பார்வையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுவும் சனியும், ராகுவும் சூரியனை பார்ப்பதால், தாயின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். தொழில், வியாபாரம் போன்றவை பாதிக்கப்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கான பாராட்டு கிடைக்காது. முதலீடுகளை செய்வதாக இருந்தால், சிந்தித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளால் அதிகம் கஷ்டப்பட நேரிடும். எனவே வழக்கத்தை விட சற்று அதிகமாக கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்

கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். அதுவும் சனியின் 10 ஆம் அம்சம் சூரியன் மீது விழுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இந்நேரத்தில் சனியின் அசுப பார்வை சூரியன் மீது விழுவதால், இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும். அதுவும் இதயம், எலும்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனையால் அதிகம் அவதிப்படக்கூடும். மேலும் இக்காலத்தில் நிறைய தேவையற்ற செலவுகளை சந்தித்து, அதன் விளைவாக கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம். வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கலாம். வேலையை மாற்ற நினைத்தால், அதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை கிடைக்காமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, November 19, 2024, 22:44 [IST]
Desktop Bottom Promotion