Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
சனி சுக்கிரனால் உருவான கேந்திர திருஷ்டி யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது..
Kendra Drishti Yoga On 28 October 2024: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, கிரகங்களின் பார்வைகளும் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 28 ஆம் தேதி, அதாவது இன்று கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் பூச நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இதனால் சுக்கிரன் மற்றும் சனியினால் மிகவும் மங்களகரமான யோகமான கேந்திர திருஷ்டி யோகம் உருவாகவுள்ளது.

சனியும், செவ்வாயும் ஒன்றுக்கொன்று நேர் கோணத்தில் நகர்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சற்று காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த கேந்திர திருஷ்டி யோகத்தால் நல்ல நிதி ஆதாயமும், வெற்றிகளும், முன்னேற்றமும் ஏற்படக்கூடும். இப்போது கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரன் மற்றும் சனியினால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகமானது மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். குறிப்பாக எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடனான உறவு வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.
கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். முதலீடுகளை செய்தாலோ அல்லது ஏற்கனவே செய்திருந்தாலோ, அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
சுக்கிரன் மற்றும் சனியினால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உடன் வேலை செய்வோருடனான உறவு சிறப்பாக இருக்கும்.
வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மிதுனம்
சனி சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகமானது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவீர்கள் மற்றும் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
