Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
2025 சனிப்பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த 2 1/2 வருஷம் எப்படி இருக்கும்? - விளக்கும் ஜோதிடர்..
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானின் ராசிமாற்றம் மார்ச் மாத இறுதியில் நிகழவுள்ளது. சனிபகவானின் இந்த பெயர்ச்சி மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?
கர்ம தொழில் காரகன் சனிபகவான் வரும் 29ஆம் தேதியன்று தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் வீடான மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிபகவான் கால புருஷத் தத்துவப்படி 12ஆம் வீடான மீன ராசியில் பயணம் செய்யப்போவதால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 8 மற்றும் 9ஆம் அதிபதியான சனிபகவான் 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் வரும் 29.03.2025 முதல் 03.06.2027 வரை பயணம் செய்யப்போகிறார். மீன ராசியில் பயணம் செய்யப்போகும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீடு, 4 ஆம் வீடு 7 ஆம் வீட்டினை பார்வையிடப் போவதால் அதற்கேற்ப உங்களுக்கு பலாபலன்கள் கிடைக்கப் போகிறது.
தொழில் வாழ்க்கை
பத்தாம் இடத்து சனி கர்ம சனி.. தொழில் காரகன் சனிபகவான் கர்ம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் நல்ல வேலை கிடைக்கும். தொழில் விரிவடையும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தொலைதூர பயணங்கள் செய்ய வாய்ப்பு வரப்போகிறது. வெளிநாடுகளில் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது. பங்குச்சந்தை முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
ஆரோக்கியம்
12ஆம் வீட்டினை சனிபகவானை பார்வையிடுவதால் தூக்க குறைபாடு பிரச்சினை ஏற்படும். அந்த அளவிற்கு வேலைப்பளு அதிகரிக்கும். சரியான நேரத்திற்கு சாப்பிட கூட முடியாத அளவிற்கு எப்போதும் பிசியாக இருப்பீர்கள். எனவே உணவு, உறக்கம் விசயத்தில் திட்டமிட்டு நேரம் ஒதுக்குங்கள் இல்லாவிட்டால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நான்காம் வீட்டினை சனி பார்வையிடுவதால் வீடு பழுது பார்க்க செலவு செய்ய வேண்டியிருக்கும் சிலர் புது வீடு கட்ட முயற்சி செய்வீர்கள், கட்டிய வீட்டினை வாங்குவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும். திடீர் ஆன்மீக பயணங்கள் செய்வீர்கள். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்ப வாழ்க்கை
குடும்ப ஸ்தானத்தினை சனி பத்தாம் பார்வையாக பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத்தொழில் லாபத்தை கொடுக்கும் தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உடலில் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். புதிய பதவிகள் புரமோசன் தேடி வரும். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு குடும்பத்திலும் பணியிடத்திலும் மதிப்பும் மரியாதையும் தேடி வரும். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள்.
பரிகாரம்
கர்ம சனி காலம் என்பதால் குடும்பத்தில் கர்ம காரியம் செய்வதற்கான காலமாகும். வீட்டில் உடல் நலம் சரியில்லாமல் பெரியவர்கள் இருந்தால் அதற்கேற்ப செலவுகள் வரலாம் கவனம். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றலாம்.. ஆஞ்சநேயருக்கு வெண்ணை, வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வேத ஜோதிடத்தின் படி, நீதிமான் சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் தேதி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருப்பார்.
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 8 மற்றும் 9ஆம் அதிபதியான சனிபகவான் 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் வரும் 29.03.2025 முதல் 03.06.2027 வரை பயணம் செய்யப்போகிறார். மீன ராசியில் பயணம் செய்யப்போகும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீடு, 4 ஆம் வீடு 7 ஆம் வீட்டினை பார்வையிடப் போவதால் அதற்கேற்ப உங்களுக்கு பலாபலன்கள் கிடைக்கப் போகிறது.
கர்ம சனி காலம் என்பதால் குடும்பத்தில் கர்ம காரியம் செய்வதற்கான காலமாகும். வீட்டில் உடல் நலம் சரியில்லாமல் பெரியவர்கள் இருந்தால் அதற்கேற்ப செலவுகள் வரலாம் கவனம். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றலாம்.. ஆஞ்சநேயருக்கு வெண்ணை, வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications