Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
2025-ல் சனிபகவானும்-சூரியனும் இணைவதால் உங்கள் ராசிக்கு என்ன நடக்கபோகுதுனு தெரியணுமா? இத படிங்க...!
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் மற்றும் சனி போன்ற இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் இணைப்பு குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. அதேசமயம் சனி ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் கர்மாவின் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் ஒன்றாக வரும்போது, குறிப்பாக சனிபகவான் ஆட்சி செய்யும் கும்ப ராசியில் இணையும் போது , அது சவால்கள் மற்றும் வளர்ச்சி நிறைந்த கலவையை உருவாக்குகிறது.
இந்த அரிய கிரக இணைப்பு 12 பிப்ரவரி 2025 அன்று நடைபெற உள்ளது, மேலும் இது சில நாட்கள் நீடிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் முரண்பட்ட ஆற்றல்களைக் கொண்டிருப்பதால், அவற்றின் இணைவு சிலர் பதற்றத்தை உருவாக்கலாம், அவர்களின் சகிப்புத்தன்மையை சோதிக்கலாம். அதேசமயம் சிலருக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைக் கொடுக்கும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். இந்த பதிவில் சனி-சூரியன் இணைப்பு உங்கள் ராசிக்கு எப்படி இருக்குமென்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த இணைப்பு அவர்களின் 11 வது வீட்டில் நடக்கிறது, இது ஆதாயங்கள் மற்றும் சமூக வட்டங்களுடன் தொடர்புடையது. இந்த இணைப்பு நல்ல தொழில் வாய்ப்புகளை உருவாக்கலாம், ஆனால் மேஷ ராசிக்காரர்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடனான தொடர்புகளில் கவனமாக இருக்க வேண்டும். தவறான தகவல்தொடர்பு மோதல்களுக்கு வழிவகுக்கும், எனவே பொறுமையைக் கடைப்பிடிப்பது முக்கியம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நற்பெயரைக் கட்டுப்படுத்தும் 10 ஆம் வீட்டில் இந்த கிரக இணைப்பு உருவாகிறது. இது கூடுதல் பொறுப்புகள் அல்லது வேலையில் ஒரு மாற்றத்திற்கு வழிவகுக்கும். பணிச்சுமை அதிகரிக்கக்கூடும் என்றாலும், அவர்களின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புபினால் இது தொழில்முறை வளர்ச்சிக்கான காலமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் 9 வது வீட்டில் நடக்கும் சூரியன்-சனி சேர்க்கை உயர் கல்வி, நம்பிக்கைகள் அல்லது நீண்ட தூர பயணம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க போராட்டங்களைக் குறிக்கிறது. மிதுன ராசிக்காரர்கள் தங்கள் முயற்சிகளில் உறுதியின்றியோ அல்லது கட்டுப்படுத்தப்பட்டதாகவோ உணரலாம். இருப்பினும், இந்த காலகட்டம், அவர்களின் இலக்குகளை விரிவுபடுத்தவும், புதிய சவால்களை ஏற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கிறது.
கடகம்
கடகத்திற்கு எதிர்பாராத மாற்றங்களுடன் தொடர்புடைய 8 வது வீட்டில் இந்த கிரக இணைப்பு ஏற்படுகிறது. இது நிதிரீதியான பிரச்சினைகள் அல்லது உடல்நல பிரச்சினைகளைக் கொண்டு வரலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது, மேலும் அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த இணைப்பின் தாக்கத்தை அவர்களின் உறவுகள் மற்றும் கூட்டாண்மையை பிரதிபலிக்கும் 7 ஆம் வீட்டில் உணருவார்கள். இதனால் தனிப்பட்ட உறவுகள் அல்லது நட்பில் பதற்றம் இருக்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்லிணக்கத்தை பராமரிக்க தெளிவான பேச்சு மற்றும் சமரசத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் ஆரோக்கியத்தின் 6 ஆம் வீட்டில் இந்த கிரக மாற்றத்தை சந்திக்கப் போகிறார்கள். இதனால் அவர்கள் பணிச்சுமை அதிகரிப்பு மற்றும் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும், ஆனால் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
துலாம்
துலாம் ராசியின் படைப்பாற்றல் மற்றும் குழந்தைகளைப் பாதிக்கும் 5 வது வீட்டில் இந்த கிரக இணைப்பு நடைபெறப்போகிறது. இதனால் அவர்கள் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் தடைகள் அல்லது சவால்களை எதிர்கொள்ளலாம். இருப்பினும், விடாமுயற்சியுடன், இது அவர்களின் திறமைகளை சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்புகளை வழங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் நான்காம் வீட்டில் சூரியன்-சனி இணைவதால் குடும்ப விவகாரங்கள் பாதிக்கப்படலாம். வீட்டில் சில பதட்டமான சூழ்நிலைகள் ஏற்படலாம் அல்லது பொறுப்புகள் அதிகரிக்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் குடும்பப் பிரச்சினைகளை பொறுமையுடனும் புரிதலுடனும் அணுக வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, 2025-ம் ஆண்டு சூரியன்-சனி சேர்க்கை தொடர்பு கொள்ளுதல் மற்றும் குறுகிய பயணங்களைக் குறிக்கும் 3-வது வீட்டில் நடைபெறுகிறது. இந்தச் சீரமைப்பு தவறான புரிதல்கள் அல்லது தகவல்தொடர்புகளில் தாமதங்களை ஏற்படுத்தலாம், ஆனால் இது சுய சிந்தனை மூலம் கவனமாக திட்டமிடுவதற்கு ஏற்ற காலமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நிதி மற்றும் பேச்சை நிர்வகிக்கும் 2 வது வீட்டில் இந்த கிரக மாற்றத்தை உணருவார்கள். இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்கள் தங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும், ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நிதி விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருபதுக்கு நல்ல பலன்களை அளிக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் இணைவதால், அவர்கள் சந்தேகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக சவால்கள் போன்ற பிரச்சினைகளை சந்திக்கலாம். இது சுய ஒழுக்கம் மற்றும் சுயபரிசோதனைக்கான நேரம், இந்த கடினமான காலகட்டம் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த சூரியன்-சனி சேர்க்கை 2025 ஆன்மீகம் மற்றும் தனிமையுடன் தொடர்புடைய 12 ஆம் வீட்டில் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்கள் தங்கள் முயற்சிகளிலிருந்து பின்வாங்கும் சூழலுக்கு தள்ளப்படலாம். மனநலம் மற்றும் தியானத்தில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
