Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
30 ஆண்டுகளுக்கு பின் வக்ரமாகியுள்ள சனி பகவான்: நவம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலமா இருக்கும்..
Saturn Retrograde In Pisces Till November 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதோடு ஒரு ராசியில் பயணிக்கும் போது, சனி பகவான் சில காலம் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிப்பார்.
சனி பகவான் வக்ரமாக இருக்கும் போது, இதுவரை பிரச்சனைகளை சந்தித்தவர்களின் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி, சந்தோஷம் பெருகும். அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 13 ஆம் தேதி தான் சனி பகவான் வக்ர நிலையில் பயணிக்க தொடங்கியுள்ளார்.

இந்த வக்ர நிலையில் சனி பகவான் நவம்பர் மாதம் வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைவார். இப்படி வக்ரமாகியுள்ள சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
குறிப்பாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் மற்றும் புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் வக்ரமாகியுள்ள சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சட்ட விஷயங்களில் முடிவுகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் பல புதிய சாதனைகளைப் புரிவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை தொழிலை செய்து வந்தால் நிறைய லாபத்தை பெறுவீர்கள். தந்தையுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்கனவே முதலீடுகளை செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலை மேம்படும். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகிவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும். முக்கியமாக சனி வக்ரமாவதால் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications