Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
10 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்...
Shadashtak Yog 2025 After 10 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவதோடு, மனித வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஏப்ரல் மாத தொடக்கத்தில் சந்திரனின் கடக ராசிக்குள் நுழைந்தார்.
இந்த கடக ராசியில் ஜூன் 07 அம் தேதி வரை இருந்து, பின் சிம்ம ராசிக்குள் நுழைவார். சிம்ம ராசிக்குள் செவ்வாய் நுழையும் போது, சனி பகவான் மீன ராசியில் இருப்பதால், ஒரு மோசமான யோகம் உருவாகவுள்ளது. அது தான் ஷடாஷ்டக யோகம். இந்த யோகம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய், சனியால் உருவாகிறது. இந்த அசுப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதுவும் பண விஷயத்தில் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இப்போது சனி, செவ்வாயால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
ஷடாஷ்டக யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே வேலையில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும். திருமணமானவர்கள் இக்காலத்தில் திருமண வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது மோசமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய பண இழப்பை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்களின் வருமானத்தில் குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதன் விளைவாக பண பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது பலவிதமான தீங்கை விளைவிக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். உங்களுக்கும் உங்களின் வாழ்க்கைத் துணைக்கும் இடையே மனக்கசப்புகள் அதிகரிக்கும். நிறைய வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபத்துக்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வணிகர்களின் பணம் எங்காவது சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளதால், பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications