Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க..
10 ஆண்டுகளுக்கு பின் சனி செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..
Saturn Mars Conjunction 2025: ஜோதிடத்தின்படி நவகிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில சமயங்களில் கிரகங்கள் நட்பு அல்லது பகை கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த கிரகங்களின் சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியான செவ்வாயும், நீதிமான் சனி பகவானும் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த கிரக சேர்க்கையால் உருவாகும் யோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிலர் பண இழப்பையும், ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இப்போது சனி செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
ஷடாஷ்டக யோகத்தால் கடக ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படக்கூடும். கொடுக்கல் வாங்கல்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த பணம் திரும்ப கிடைக்காது. தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகளை செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எதிரிகள் நிறைய தொந்தரவு செய்வார்கள். ஆரோக்கியம் சற்று மோசமடையக்கூடும். எங்கும் புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்கும் முன் பலமுறை யோசித்து பின் எடுக்க வேண்டும். பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கவனமாக பேச வேண்டும். முக்கியமாக வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது தீங்கை விளைவிக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் கோபத்தைத் தவிர்க்க வேண்டும். வாகனத்தை ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. சிலர் நிதி இழப்பை சந்திக்கலாம். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். இதனால் பட்ஜெட் பாழாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
