Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம்
37 நாட்கள் கும்பத்தில் அஸ்தமனமாகும் சனிபகவான்: இந்த 3 ராசிக்காரங்களுக்கு வாழ்க்கை நரகமா இருக்கப்போகுது...
Saturn Combust 2025 In Aquarius: ஜோதிடத்தின் படி, கிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டு காலம் பயணிப்பார். அப்படி ஒரு ராசியில் பயணிக்கும் போது சனி பகவான் வக்ரமாவதோடு, அஸ்தமனமாகி உதயமாகவும் செய்வார்.
சனி பகவான் நீண்ட காலம் ஒரு ராசியில் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 22 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். சனி பகவான் இந்த கும்ப ராசியில் 37 நாட்கள் அஸ்தமன நிலையில் பயணிக்கவுள்ளார்.

சனி அஸ்தமனமாவதால், இக்காலத்தில் சனி பகவான் பலவீனமாக இருப்பார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருப்பதோடு, சில ராசிக்காரர்கள் பலவிதமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இப்போது சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாவதால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் கடக ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். வீட்டில் பணப்பற்றாக்குறையை அதிகம் சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பிரச்சனைகளால் மனஅமைதி சீர்குலையும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கைத்துணையுடன் பிரச்சனைகளை சந்திப்பார்கள். உடன் பிறந்தவர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பேச்சால் உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தல் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமான உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே தொழிலில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக சொத்து பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடையேயான உறவு சற்று மோசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications