Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நிகழும் கிரகங்களின் அரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Maha Shivratri 2025: இந்த ஆண்டின் மகா சிவராத்திரியானது பிப்ரவரி 26 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் சிவ பக்தர்கள் சிவனின் ஆசியைப் பெற விரதமிருந்து இரவு முழுவதும் கண் விழித்து, சிவனை வழிபடுவார்கள். இப்படிப்பட்ட நன்னாளானது ஜோதிடத்தின் படி சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் பல வருடங்களுக்கு பின் மகா சிவராத்திரி நாளில் அரிய கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளன.
அதுவும் இந்த மகா சிவராத்திரி நாளில் அசுரர்களின் குருவான சுக்கிரன் மீன ராசியில் இருப்பார். அப்போது அந்த மீன ராசியில் ராகுவும் இருப்பார். இதனால் மீன ராசியில் ராகு, சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. அதோடு இந்நாளில் கிரகங்களின் தலைவனான சூரியனும், சனி பகவானும் கும்ப ராசியில் ஒன்றாக பயணிப்பார்கள். இப்படியான நிகழ்வு சுமார் 152 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளன.

இந்த அரிய நிகழ்வால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்பட போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி நாளில் நிகழும் அரிய கிரக சேர்க்கையால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மேஷம்
மகா சிவராத்திரி நாளில் உருவாகும் கிரகங்களின் அரிய சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு வேலையை மாற்றும் வாய்ப்புக்கள் தேடி வரும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி நாளில் உருவாகும் கிரகங்களின் அரிய சேர்க்கையால் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வருவதற்கான வாய்ப்புள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
