Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
500 ஆண்டுக்கு பின் ரக்ஷா பந்தன் நாளில் வக்ரமாக இருக்கும் 4 கிரகங்கள்: இந்த 3 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கும்!
Raksha Bandhan 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, வக்ர நிலையிலும் பயணித்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில சமயங்களில் பண்டிகை நாட்களில் கிரகங்களின் நிலைகள் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 09 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ரக்ஷா பந்தன் நாளில் சனி, புதன், ராகு, கேது ஆகிய 4 கிரகங்கள் வக்ரமாக இருக்கும். அதாவது பின்னோக்கி பயணிக்கும். இப்படியான நிலை சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் ரக்ஷா பந்தன் நாளில் நிகழ்கிறது. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் நிதி நிலையில் நல்ல உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது 500 ஆண்டுகளுக்கு பின் ரக்ஷா பந்தன் நாளில் வக்ரமாக இருக்கும் 4 கிரகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
ரக்ஷா பந்தன் நாளில் வக்ரமாக இருக்கும் 4 கிரகங்களால் மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அவ்வப்போது திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்கள் திறமையை மேம்படுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
ரக்ஷா பந்தன் நாளில் வக்ரமாக இருக்கும் 4 கிரகங்களால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் வருமானத்தில் நல்ல உயர்வைக் காணக்கூடும். பணிபுரிபவர்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும் வாய்ப்புள்ளது. மன அமைதி கிடைக்கும். தொழிலதிபர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரக்ஷா பந்தன் நாளில் வக்ரமாக இருக்கும் 4 கிரகங்களால் ரிஷப ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கும். எடுக்கும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
