Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
18 ஆண்டுகளுக்கு பின் ராகு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: பண மழையில் நனையும் ராசிகள்!
Navpancham Rajyog 2025: ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாகும். இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார் மற்றும் இவர் மீண்டும் அந்த ராசிக்கு வருவதற்கு 18 ஆண்டுகள் ஆகும். கிரகங்களில் ராகு எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிப்பார். தற்போது இந்த ராகு சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2026 ஆம் ஆண்டு வரை இருப்பார்.
இதனால் இக்காலத்தில் ராகு மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அந்த வகையில் ராகு சுக்கிரனுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் போது சுக்கிரன் துலாம் ராசியில் இருப்பார். மேலும் இந்த துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் ராகுவும், கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரனும் இருப்பார்கள்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படப்போகிறது. இப்போது ராகு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் பல வழிகளில் சாதமாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். கலை, ஃபேஷன் டிசைனிங், ஹோட்டல் போன்ற துறைகளில் இருப்பவர்கள் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆடம்பரமான வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்களையும் பெறலாம். வேலை தேடுபவர்களுக்க புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணப்பிரச்சனைகள் எதுவும் இருக்காது. செல்வத்தில் நல்ல உயர்வு ஏற்படும். மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு புதிய ஆர்டர் அல்லது திட்டங்கள் கிடைக்கலாம். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் வெற்றிக் கதவுகள் திறக்கும். குறுகிய பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைவீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த நீண்ட கால பிரச்சனைகள் தீரும். தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் தகவல் தொடர்பு திறன் மேம்படும். தொழிலில் கணிசமான உயர்வைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications