Latest Updates
-
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது! -
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம்
ஆண்டின் இறுதியில் நடக்கும் ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படப்போகுது!
Rahu Transit 2026: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். சனி பகவானுக்கு அடுத்தப்படியாக ஒரு ராசியில் நீண்ட காலம் ராகு இருப்பதால், ராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றம் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இவர் மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி பயணிக்கக்கூடியவர்.

அதுவும் ஜோதிடத்தில் ராகுவின் பெயர்ச்சியானது மிகவும் செல்வாக்குமிக்கதாக கருதப்படுகிறது. ஏனெனில் இப்பெயர்ச்சியானது ஒருவரின் தொழில், நிதி நிலைமை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் பெரிய மாற்றங்களைப் பாதிக்கிறது. இப்படிப்பட்ட ராகு தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த ராகு 2026 ஆம் ஆண்டின் இறுதியில் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான்.
ராகு சனியின் ராசிக்குள் செல்வது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரவுள்ளது. அதுவும் இந்த பெயர்ச்சியானது டிசம்பர் 05 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியினால் 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம், நிதி ஆதாயம் மற்றும் வெற்றிக்கான புதிய வாய்ப்புகளை பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
ராகு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையவுள்ளது. ராகுவின் அருளால் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப் போகிறது. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். உறவுகளில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகிறது. மன அழுத்தம் குறைந்து மன அமைதி அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலைமை மேம்படும். சிறிது கஷ்டப்பட்டாலும், கடினமாக உழைத்தால் நல்ல பலன்களைப் பெறலாம். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
விருச்சிகம்
ராகு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை மற்றும் தொழில்களில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படும். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். நிதி விஷயங்களில் சமநிலையைப் பேணுவது மிகவும் முக்கியமானது. கடின உழைப்பும் புத்திசாலித்தனமான முடிவுகளும் எதிர்காலத்தில் நல்ல பலன்களைத் தரும்.
மீனம்
ராகு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் தடைபட்ட பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட காலமாக புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான ஆசைகள் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். செலவுகள் சற்று அதிகரிக்கும். எனவே பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, இந்தக் காலம் முன்பை விட மிகவும் சாதகமாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



