Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள்
18 ஆண்டுகள் கழித்து நிகழும் ராகு-சூரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்...
Rahu Sun Conjunction In Aquarius On 13 February 2026: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியும் கூட. மறுபுறம் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர் மற்றும் இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்.
தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே ராகு இருப்பதால், கும்பத்தில் ராகு-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இதன் விளைவுகள் மார்ச் நடுப்பகுதி வரை இருக்கும்.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். ஜோதிடத்தின் படி சூரியனுக்கும் ராகுவுக்கும் இடையே இயற்கையான பகை உள்ளது. எனவே இந்த ராகு சூரிய சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது கும்பத்தில் நிகழும் ராகு சூரிய சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதன் விளைவாக வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். திடீர் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக சேமித்து வைத்த பணம் குறையும் வாய்ப்புள்ளது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் சிரமப்படக்கூடும். இந்த சேர்க்கையின் மோசமான விளைவைக் குறைக்க சிவபெருமானை தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். பணியிடத்தில் அரசியல் மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரிய அளவில் பிரச்சனையில் சிக்குவீர்கள். இக்காலத்தில் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த வேலையை செய்தாலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சேர்க்கையின் மோசமான விளைவைக் குறைக்க கோதுமை அல்லது வெல்லம் தானம் செய்ய வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்ப விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகளை பெரிய முடியாமல் போகலாம். வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சேர்க்கையின் மோசமான விளைவைக் குறைக்க சூரிய பகவானுக்குரிய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை குறையும். வாழ்வில் பல தடைகளை சந்திக்க நேரிடும். பண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் இருந்து திசைதிருப்பப்படலாம். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த சேர்க்கையின் மோசமான விளைவைக் குறைக்க சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்வது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications