Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இந்த 4 மாதத்தில் பிறந்தவங்க சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் தலைவராக இருப்பார்கள்..உங்க பிறந்த மாதம் என்ன?
ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்து ராசியும், நட்சத்திரமும் எப்படி முக்கியமானதோ அதேபோல அவர்களின் பிறந்த மாதமும் மிகவும் முக்கியமானது. அதன்படி ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சில மாதங்களில் பிறந்தவர்கள், மிகவும் கவர்ச்சிகரமான தலைவராகவும், அனைவரிடமும் செல்வாக்கு செலுத்தும் தனித்துவமானவர்களாகவும் இருப்பார்கள்.
ஒருவர் இந்த குறிப்பிட்ட மாதங்களில் ஒன்றில் பிறக்கும்போது, அவர்களைச் சுற்றியுள்ளவர்களை வழிநடத்தவும் ஊக்குவிக்கவும் அவர்களுக்கு உள்ளார்ந்த திறமை இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவர்கள் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும், சமூகத்தில் அனைவரும் மதிப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி
ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் அனைத்திலும் முதலிடத்தில் இருக்க விரும்புபவர்கள். அவர்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் குணம் கொண்டவர்கள், அவர்கள் ஒருபோதும் அப்பாவியாகவோ அல்லது மென்மையானவராகவோ இருப்பதில்லை.
அவர்கள் இணையில்லா மனவலிமைக் கொண்டவர்கள், பொறுப்பானவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள். அவர்கள் அதிர்ஷ்டத்தை விட தங்கள் திறமையையும், உழைப்பையும் நம்புகிறார்கள், அதனால் வெற்றிக்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்களின் மனவலிமையும், அவர்கள் அடையும் உயரமும் அவர்களை எப்போதும் செல்வாக்கு மிக்கவர்களாக மாற்றுகிறது.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் மற்ற மாதங்களில் பிறந்தவர்களை விட வித்தியாசமானவர்கள். அவர்கள் சூரியனைப் போல, அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் உறுதியானவர்கள். அவர்கள் எப்போதும் அனைத்திலும் முன்னணியில் இருப்பார்கள், அவர்கள் தாங்கள் யார் என்று வெளிப்படுத்த பயப்படுவதில்லை.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வெளிப்படையான ஆளுமையைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் இயற்கையாகவே தலைவராகப் பிறந்தவர்கள். அவர்கள் எளிதாக மாற்றத்தை உருவாக்குகிறார்கள் மற்றும் ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் நல்ல தோற்றத்துடன் அனைவரையும் வசீகரிக்கும் கம்பீரமான இருப்பைக் கொண்டுள்ளனர்.
அக்டோபர்அக்டோபரில் பிறந்தவர்கள், சக்திவாய்ந்த செல்வாக்கை வெளிப்படுத்தும் தனித்துவமான வலிமையைக் கொண்டுள்ளனர். அவர்கள் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குபவர்கள் மற்றும் தங்களின் இலட்சியத்தை தேடி நீண்ட தூரம் பயணிக்கிறார்கள். புத்திக்கூர்மை மற்றும் சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி, அவர்கள் ஆழமான உண்மைகளைக் கண்டறியும் திறன் கொண்டவர்கள்.
அவர்கள் தங்களின் நோக்கத்தையும், திறமையையும் மறைக்கும் ரகசியமானவர்கள். அவர்கள் வார்த்தைகள் எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவதாக இருக்கும், மேலும் அவர்கள் அமைதியாக இருக்கும்போது கூட அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்றன.
டிசம்பர்
டிசம்பரில் பிறந்தவர்கள் மாற்றத்தையும், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வதிலும் சிறந்து விளங்குகிறார்கள். இவர்கள் வாழ்க்கை, மரணம் மற்றும் பொழுதுபோக்கின் உண்மையான அர்த்தத்தை அறிந்தவர்களாக அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு சவாலை எதிர்கொள்ளும் போதும், அவர்கள் தங்கள் ஆறுதல் மண்டலங்களுக்கு வெளியே சென்று கடினமாக உழைக்கிறார்கள், முன்னோக்கி செல்ல ஒரு வித்தியாசமான பாதையைக் கண்டுபிடிப்பார்கள்.
இவர்களின் இயற்கையான நெகிழ்வுத்தன்மையையும், வலிமையையும் கொண்டுள்ளனர். சிரமங்களுக்கு மத்தியில் வெற்றிபெறும் மற்றும் சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் அவர்களின் திறன் அவர்களை சமூகத்தில் முக்கியமானவர்களாக மாற்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












