Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
மகரத்தில் ஒரே வாரத்தில் 2 முறை உருவாகும் பஞ்சகிரக யோகம்: பிப்ரவரியில் இந்த 5 ராசிக்கு செல்வம் குவியும்..
Panchgrahi Yog Will Form Twice In Capricorn In February 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது 5 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகக்கூடியது. முக்கியமாக இந்த யோகம் மகர ராசியில் இரண்டு முறை, அதுவும் ஒரே வாரத்தில் உருவாகவுள்ளது. இப்படியான நிகழ்வு மிகவும் அரிதானது. இந்நிகழ்வு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.

2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி 18 ஆம் தேதி சனி பகவானின் மகர ராசியில் ராகு, புதன், சுக்கிரன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 24 ஆம் தேதி செவ்வாய், ராகு, புதன், சுக்கிரன் மற்றும் சூரியனுடன் சேர்ந்து மீண்டும் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது.
இப்படி ஒரே வாரத்தில் 2 முறை உருவாகும் இந்த யோகத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம், நிதி நிலை உயர்வு, வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். இப்போது பிப்ரவரி மாதத்தில் 2 முறை உருவாகும் பஞ்சகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திறமை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். நிதி நிலைமை மேம்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொத்துக்களால் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானது இருமடங்காக அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வணிகர்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும். இதன் மூலம் நீண்ட கால நன்மைகள் கிடைக்கும். அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களின் வருமானம் அதிகரிக்கும். புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பெயரும் புகழும் அதிகரிக்கும். எங்கு சென்றாலும் மரியாதை கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் முயற்சிகள் நல்ல பாராட்டைப் பெறும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். ஒட்டுமொத்தமாக வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். வெற்றிகள் குவியும்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலையையும் எளிதில் எதிர்கொள்வார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி நிலைமை உயரும். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதிப்பார்கள். நிதி ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பல வழிகளில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
