Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
அக்டோபர் மாதம் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்கள் பெரிய வெற்றியை அடையப்போகிறார்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொள்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் காரணமாக பல சுபயோகங்களும் ராஜயோகங்களும் உருவாகின்றன. இந்த ராஜயோகங்களின் பலன்கள் குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
அக்டோபர் மாதத்தில் பல ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் நிகழப்போகிறது. இதன் விளைவாக, சுபயோகங்கள் உருவாகின்றன. அந்தவகையில் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் அக்டோபரில் உருவாகப் போகும் முக்கியமான ராஜயோகமாகும். லக்ஷ்மி நாராயண யோகம் சுக்கிரனும், புதனும் இணைவதன் மூலம் உருவாகிறது.

அக்டோபர் 13 ஆம் தேதி, புதன் துலாம் ராசிக்குள் நுழைகிறது மற்றும் ஏற்கனவே இந்த ராசியில் சுக்கிரன் உள்ளது, இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் முதல் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகிறது. அதன் பிறகு, அதே கிரகங்கள் விருச்சிக ராசியில் மீண்டும் இணைகிறது, இதனால் ஒரே மாதத்தில் இரண்டு லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இந்த இரண்டு யோகங்களால் சில ராசிக்காரர்கள் பெரும் பலன்களை பெறப்போகிறார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. அவர்கள் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே நல்ல பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையலாம்.
வேலை செய்யுமிடத்தில் மேலதிகாரி மற்றும் கீழ் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். வேலையில் இருபவர்களுக்கு வேலையைத் தவிர புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும். குடும்ப வாழ்க்கை மற்றும் திருமணம் இரண்டுமே சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
லக்ஷ்மி நாராயண யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் அக்டோபர் மாதம் முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். அவர்கள் நீண்ட கால துன்பத்திலிருந்து விடுபடுவார்கள் மற்றும் அவர்களின் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் பல சாதனைகள் நடக்கும்.
வேலை செய்யுமிடத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக முடிக்காமல் விட்ட வேலைகள் இப்போது முடிவடையும். உங்களின் இலக்குகளை அடைவதற்கு இது நல்ல நேரம். நீதிமன்ற நடவடிக்கைகளில் சாதகமான தீர்ப்பு வரும். திருமண வாழ்க்கையில் உங்களின் துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
துலாம்
அக்டோபர் மாத இரட்டை லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்களும் சிறப்பான பலனை அடையப்போகிறார்கள். செப்டம்பர் மாதத்தை விட துலாம் ராசிக்கு அக்டோபர் சிறந்த மாதமாக இருக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும். கடின உழைப்பின் மூலம் இலக்கை அடையும் அதிர்ஷ்டம் உண்டாகும்.
சில பெரிய தடங்கல்கள் வரலாம் ஆனால் நண்பர்களின் உதவியால் அவற்றை எளிதில் கடக்கலாம். காதல் திருமணத்திற்கு வழிவகுக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகத்தால் அக்டோபர் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். நினைத்ததை சாதிக்கும் துணிச்சலும், யோகமும் கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
நண்பர்களின் ஒத்துழைப்புடன் உங்கள் இலக்குகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்ற முடியும். சுப காரியங்கள் பங்கேற்கும் சூழ்நிலை உருவாகும். உங்கள் மனைவியிடமிருந்து சில மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்கலாம். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

