Latest Updates
-
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
October 2026 Horoscope: 2026 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமான அக்டோபர் மாதம் வரப்போகிறது. சில மாதங்கள் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும், அதேசமயம் சில மாதங்கள் அதிர்ச்சியைக் கொடுக்கும். ஜோதிடத்தின் படி இந்த மாற்றங்களுக்குக் காரணம் அந்த மாதத்தில் நிகழ்ந்த கிரக மாற்றங்களாக இருக்கும். கிரகங்கள் ஒருவரின் ராசிக்கு சாதகமான இடத்திற்கு வரும்போது ஆச்சரியங்களும், பாதகமான இடத்திற்கு வரும்போது அதிர்ச்சியும் நமக்கு ஏற்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழப்போகிறது. அக்டோபர் மாத ஜோதிட கணிப்புகளின் படி, அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். அக்டோபர் மாதம் முழுவதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல அதிசயங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
அக்டோபர் மாதத்தில், மிதுன ராசிக்காரர்கள் புகழையும், செல்வத்தையும் அடையலாம். அக்டோபர் மாதம் அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்கப்போகிறது. அக்டோபர் 23-ஆம் தேதி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், அவர்களின் தொழில் வாழ்க்கையில் வெற்றிகளைக் கொடுக்கப்போகிறது. அதேவேளையில், அக்டோபர் 10-அன்று நிகழும் அமாவாசை அவர்களுக்கு தொழில் துறையில் புதிய உத்வேகத்தை அளிக்கக்கூடும். சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் பணி நடைமுறைகள், தகவல் தொடர்பு மற்றும் உறவுகளை மேம்படுத்த உதவும். அதே சமயம், குரு மற்றும் செவ்வாய் ஆகியவை அவர்களின் ஆற்றலை அதிகரிக்கும். முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், புதிய வாய்ப்புகளை இந்த மாதத்தில் அவர்கள் திறம்படப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் ஆண்டின் மிகவும் அதிர்ஷ்டமான மாதங்களில் ஒன்றாக இருக்கப்போகிறது. உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குரு மற்றும் செவ்வாய் கிரகங்கள் உங்கள் தன்னம்பிக்கை, ஆற்றல் மற்றும் உத்வேகம் ஆகியவற்றை அதிகரிக்கும். அதேசமயம், சாதகமான கிரக மாற்றங்கள் உங்களைச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் நிலைநிறுத்தும். தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். அக்டோபர் 25 அன்று நிகழவுள்ள பௌர்ணமி உங்கள் தொழில் சார்ந்த அம்சங்களைத் தூண்டிவிடும். எனவே, உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், உங்கள் லட்சியங்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவும் இதுவே ஏற்ற தருணம். உங்களின் விடாமுயற்சி உங்களுக்கு அங்கீகாரத்தை மட்டுமல்லாமல், தொழில் வளர்ச்சிற்கான புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு, அக்டோபர் மாதம் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் புதிய தொடக்கங்களுக்கான மாதமாக இருக்கும் அக்டோபர் 10 அன்று உங்கள் ராசியில் நிகழும் அமாவாசை ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கும் முக்கிய தருணமாக இருக்கலாம். எனவே, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுக்கவும் புதிய இலக்குகளை நிர்ணயிக்கவும் இது பொருத்தமான மாதமாக இருக்கும். அக்டோபர் 24 புதன் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவதால் உங்களின் நிதிநிலை வளர்ச்சியடையத் தொடங்கலாம். உங்கள் வரவு-செலவுத் திட்டம், செலவுகள் மற்றும் நிதி சார்ந்த திட்டமிடல்களை உன்னிப்பாகக் கவனிக்க இது சிறந்த தருணமாக இருக்கும். மாதத்தின் இறுதியில் சுக்கிரன் மீண்டும் துலாம் ராசிக்குத் திரும்புவதால், இது உங்கள் கவர்ச்சியை அதிகரிப்பதோடு, உறவுகள் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, அக்டோபர் மாதம் தங்களை புதுப்பித்துக் கொள்ளவும், புதிய வாய்ப்புகளைத் தேடிச்செல்லவும் ஏற்ற மாதமாக இருக்கும். சுக்கிரன் அக்டோபர் 25 வரை உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் நிலைத்திருப்பார். குருபகவானின் ஆசியால் அவர்களின் பொருளாதார நிலையில் பெரும் முன்னேற்றம் இருக்கும். அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து புதிய வருமானங்களை எதிர்பார்க்கலாம். வேலையில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம் மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், புரிதலும் அதிகரிக்கும், மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய முதலீடுகள் செய்வதற்கான சிறந்த நேரமாக இது இருக்கும். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

