Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. இந்த அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
October 2024 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2024 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமான அக்டோபர் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2024 அக்டோபர் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். திடீரென்று பணம் தேடி வரும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணிற்கு உரியவர்கள் அக்டோபர் மாதத்தில் தங்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் திட்டங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிவடையும். பண வரவு சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கை செழிப்பாக இருக்கும். பணியிடத்தில் உடனே வெற்றிளை காணாவிட்டாலும், தாதமாக வெற்றி பெறுவீர்கள். பேச்சால் பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். இம்மாதத்தில் தொடங்கும் எந்த ஒரு வேலையும் வெற்றிகரமாக இருக்கும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இநத தேதிகளில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உங்களின் அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடிவடையும். காதலித்து வந்தால் அன்பு அதிகரிக்கும். இம்மாத இறுதியில் ஏற்படும் ஒரு புதிய மாற்றத்தால் உங்கள் வாழ்க்கை இனிமையாகவும் செழிப்பாகவும் இருக்கும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த எண்ணிக்கு உரியவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் அதிக செலவுகளால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடுகளை செய்வதாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். இம்மாதத்தில் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். பயணங்களால் நல்ல ஆதாயங்களைப் பெறுவீர்கள். முக்கியமாக இம்மாதத்தில் எதிர்காலத்தில் நல்ல பலன்களைத் தரக்கூடிய ஒருவரது நட்பு கிடைக்கும்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் அது சற்று குறைவாகவே இருக்கும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மாத இறுதியில் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணிற்கு உரியவர்கள் அக்டோபர் மாதத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் சூழ்நிலைகள் சற்று மோசமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் அதிகரிக்கும். மாத இறுதியில் மோசமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாத தொடக்கத்தில் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். இருப்பினும், முதலீடு செய்வதாக இருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











