Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்
September 2026 Numerology Predictions: ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் பிறக்கப்போகிறது. இந்த மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நிகழப்போவதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. எண் கணிதத்தின் படி ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.

2026 ஆம் ஆண்டின் 9-வது மாதமான செப்டம்பர் மாதம் உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, நியூமராலஜியின் படி, ஒருவரது பிறந்த தேதியின் அடிப்படையில் வரப்போகிற செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
எண் 1
அனைத்து மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் கடினமான மாதமாக இருக்கப்போகிறது. தொழிலில் தடைகளை சந்திக்க நேரிடும். சிறு வேலையை முடிக்கவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாத தொடக்கத்தில் குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வேலையில் இருப்பவர்கள் தங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். வணிகம் தொடர்பாக முடிவுகளை எடுப்பதாக இருந்தால், மாதத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் எடுங்கள். மாதத்தின் இரண்டாம் பாதியில், பொறுமையுடனும் விவேகத்துடனும் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பீர்கள். உறவுகள் சிறப்பாக இருக்க ஈகோவை தவிர்க்க வேண்டும்.
எண் 2
அனைத்து மாதத்திலும் 2, 11, 20 அல்லது 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். சூழ்நிலைகள் மிகவும் சாதகமாக இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இருந்து முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். கடனாக கொடுத்தப் பணம் மீண்டும் கைக்கு கிடைக்கும். தொழிலை முன்னோக்கி எடுத்துச் செல்லும் திட்டங்கள் பலனளிக்கும். மாணவர்களுக்கு சூழ்நிலை நன்றாக இருக்கும். பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு மாதம் முழுவதும் சுமூகமாக இருக்கும்.
எண் 3
அனைத்து மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் திட்டமிட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடிவடையும். பரஸ்பர பேச்சுவார்த்தைகள் மூலம் சொத்து தொடர்பான தகராறுகள் தீர்க்கப்படும். தைரியம் மற்றும் வீரத்தால், மிகப்பெரிய வேலையையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். இந்த மாதம் உங்கள் நிதி நிலைமை மேம்படும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகம் தொடர்பான பயணம் இனிமையானதாக இருக்கும்.
எண் 4
அனைத்து மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 4. இவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் வாழ்க்கையில் உள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் சிறிய விஷயத்திற்கு கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். மாதத்தின் நடுப்பகுதியில் தொழில் ரீதியாக சாதகமற்றதாக இருக்கும். பணியிடத்தில் யாரிடமும் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். மாணவர்கள் போட்டிகளில் வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மறைமுக எதிரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு வயதான உறுப்பினரின் ஆரோக்கியம் குறித்து கவலைகள் அதிகரிக்கலாம்.
எண் 5
அனைத்து மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 5. இந்த மாதத்தின் முதல் பாதி சுமாராகவும், இரண்டாம் பாதி அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் இருக்கும். மாதத்தின் தொடக்கத்தில், வேலை தொடர்பான சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரிடம் இருந்து குறைந்த ஆதரவைப் பெறுவீர்கள். மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து சூழ்நிலைகளில் பெரிய மாற்றம் காணப்படும். தைரியம் மற்றும் முயற்சியால், தடைபட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வணிகம் தொடர்பான பயணம் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
எண் 6
அனைத்து மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆம்தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 6. இந்த மாதம் வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த மாதத்தில் உங்கள் மனதில் எந்தவிதமான எதிர்மறை எண்ணங்களையோ அல்லது உணர்வுகளையோ கொண்டு வராமல், கிடைக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். மாதத்தின் முதல் பாதியில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் இரண்டாம் பாதியில் விரும்பிய மகிழ்ச்சியும் நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கும். தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக நீண்ட அல்லது குறுகிய தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிறந்த காதல் உறவையும் திருமண உறவையும் பராமரிக்க, பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
எண் 7
அனைத்து மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 7. இந்த மாதம் சில திடீர் பிரச்சனைகள் அல்லது கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காததால் விரக்தியடையக்கூடும். மாதத்தின் முதல் பாதியில் வேலை மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்கள் பாதிக்கப்படலாம். மேலும் உறவுகள் மற்றும் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியிடத்தில் அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். இலக்குகளை சரியான நேரத்தில் அடைய உயர் அதிகாரிகளிடமிருந்து அழுத்தம் இருக்கும். இந்த மாதம் நிதி விஷயங்களில் பெரிய ஏற்ற தாழ்வுகள் எதுவும் இருக்காது. வருமானத்தில் அதிகரிப்பு அல்லது பெரிய செலவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. உறவினர்களுடன் எழும் கருத்து வேறுபாடுகள் பகைமையாக மாறக்கூடும்.
எண் 8
அனைத்து மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் விதி எண் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த வெற்றியும் லாபமும் கிடைக்கும். பல்வேறு மூலங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் வெகுமதியும் கிடைக்கக்கூடும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். காதல் உறவில் சிறிது காலமாக சில பிரச்சினைகள் இருந்தால், அவை ஒரு நண்பரின் உதவியுடன் தீர்க்கப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் துணையிடமிருந்து ஒரு ஆச்சரியப் பரிசைப் பெறலாம்.
எண் 9
அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 9. இந்த மாத தொடக்கத்தில் உங்களுக்கு உடல்நலம் தொடர்பான சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இந்த மாதம் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருப்பதால் உங்கள் பணத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டியிருக்கும்.மாதத்தின் நடுப்பகுதியில் வீட்டிற்காக திடீரென்று அதிக அளவு பணத்தை செலவிட வேண்டியிருக்கும். இந்த மாதம் பணிச்சூழல் கொஞ்சம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். காதல் விஷயங்களில் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் முன்னேற்றம் குறித்த உங்களின் கவலைகள் அதிகரிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
