Latest Updates
-
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது!
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது
ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து செப்டம்பர் மாதம் வரப்போகிறது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறுகிறது. இதனால் ஜோதிடரீதியாக செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. பல்வேறு கிரக மாற்றஙகளால் செப்டம்பர் மாதத்தில் சில சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகப்போகின்றன.

செப்டம்பர் 1 ஆம் தேதி செவ்வாய் மற்றும் புதன் இணைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கப்போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் சந்திக்கும் போது லாப திருஷ்டி யோகம் உருவாகிறது. லாப திருஷ்டி யோகம் சக்திவாய்ந்த பஞ்ச யோகங்களில் ஒன்றாகும். செவ்வாய்-புதன் உருவாக்கும் இந்த யோகத்தின் பலன்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெளிப்பட்டாலும் சில ராசிக்காரர்கள் இதனால் கூடுதல் பலன்களை அனுபவிப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். பொருளாதாரரீதியாக இது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும், மேலும் கடந்த காலத்தில் தடைப்பட்டிருந்த வேலைகளை இப்போது வெற்றிகரமாக தொடங்கலாம். வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.அந்த பொறுப்புகள் சற்றுச் சவாலாகத் தோன்றினாலும், அவை அவர்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகளைக் கொடுக்கும்.
புதிய முதலீடுகளை செய்வதற்கு இது சரியான காலமாகும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி லாபங்களை பெற வேண்டிய நேரமிது. ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும், கடுமையாக உழைக்க உறுதுணையாக இருக்கும். குடும்பத்தினரிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் நிலவும் பெரும்பாலான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத நன்மைகளை அனுபைவிக்கப்போகிறார்கள். இந்த யோகத்தால் சமூகத்தில் அங்கீகாரத்தையும் மரியாதையையும் அடையும் நேரமாக இது இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.
அவர்களின் வாழ்க்கைத் துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். இந்த காலகட்டம் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை அடைவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. லாப திருஷ்டி யோகம் உங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கக்கூடும், மேலும் உங்கள் சமூக அந்தஸ்தை அதிகரிக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்குவது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் அதற்கு இதுதான் சரியான காலம்.
திருமணமானவர்களுக்கு உங்கள் உறவில் அரவணைப்பும், புரிதலும் அதிகரிக்கும். நிதி நிலை மற்றும் மன நிம்மதி உங்கள் வாழ்க்கையில் மேலும் நிறைவை உணர உதவும். ஒட்டுமொத்தமாக, இந்த லாபதிருஷ்டி யோகம் உங்கள் வாழ்க்கையில் வெற்றி, ஸ்திரத்தன்மை மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரப்போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
