Latest Updates
-
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் 2026 செப்டம்பர் 05 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன்க கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இந்த வாரம் உங்கள் குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக உணவு மற்றும் ஓய்வில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் புதிய நட்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் யோசனைகள் பாராட்டப்படும். மேலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். காதல் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலையில் பொறுமையையும், விடாமுயற்சியையும் கடைப்பிடித்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம் அல்லது புதிய திட்டத்தில் நீங்கள் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கலாம். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டிய வாரமாக இருக்கலாம். பணியிடத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆனால் முதலீடு தொடர்பான முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க போதுமான ஓய்வும், ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் அவசியம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் உறவுகள் சிறப்பாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கலாம். ஆனால் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்பு நல்ல பலன்களைத் தரும். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மனம் அமைதியாக இருக்க உங்களுக்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகளை தடுக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சில முக்கியமான வேலைகள் இந்த வாரத்தில் வெற்றிகரமாக முடிவடையும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நிதி நிலையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்ல நிலைக்கு வரலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் பொறுமை மிகவும் அவசியம். அதேப் போல் ஒழுக்கமும் முக்கியம். இந்த வாரத்தில் எந்த ஒரு பெரிய நிதி முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், பல வழிகளிலும் ஆராய்ந்த பார்க்க வேண்டும். ஆனால் இந்த வாரத்தில் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவு நீங்கள் எதிர்பார்த்தவாறு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். இந்த வாரத்தில் சிறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் புறக்கணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அல்லது வேலை மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். தேவையில்லாத செலவைக் குறைத்தால், நிறைய பணத்தை சேமிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


