Latest Updates
-
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் கடைசிவரை சிங்கிளாவேதான் இருப்பார்களாம்... உங்க பிறந்த தேதி என்ன?
அனைவரின் வாழ்க்கையிலும் அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்க ஒரு காதல் உறவு அத்தியாவசியமானது. சிலருக்கு இது அவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு இது எவ்வளவு வயதானாலும் அமையாது. ஜோதிடம் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் பிறந்த ராசி, நேரம் மற்றும் நட்சத்திரம் போன்றவை உதவும்.
ஜோதிடம் போலவே எண் கணிதமும் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை அறிய உதவும். ஆனால் இது அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவற்றை நிர்ணயிக்கும். எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்தவர்கள் காதல் விவகாரங்களில் துரதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் இறுதிவரை கூட சிங்கிளாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிங்கிளாகவே இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து மாதத்திலும் 1-ஆம் தேதி பிறந்தவர்கள்
அனைத்து மாதத்திலும் 1 ஆம் தேதியில் பிறந்தவர்கள் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியனால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் தங்களைப் பற்றி பெருமையாக கருதுகிறார்கள், தன்னம்பிக்கையுடனும் சுதந்திரத்துடனும் விளங்குகிறார்கள். தங்கள் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்த இவர்கள், உயர்ந்த இலட்சியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தங்கள் வாழ்க்கையில், தன்னுடைய வேகத்தைக் குறைக்கும் அல்லது தங்கள் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் துணைகளை விட்டு விலகுவதே சிறந்தது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் எப்போதும் பாராட்டி, ஊக்குவிக்கும் ஒருவரை அவர்கள் துணையாக பெற விரும்புகிறார்கள், அவ்வாறு கிடைக்கவில்லையெனில் சிங்கிளாகவே இருந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.
அனைத்து மாதத்திலும் 16 ஆம் தேதி பிறந்தவர்கள்
தொலைநோக்குப் பார்வையும், ஆன்மீகத்தில் ஆர்வமும் கொண்ட இந்த தேதியை நெப்டியூன் தேதியை ஆளுகிறது. உண்மையில் இவர்கள் காதல் மீது அதிக நம்பிக்கையும், ஆர்வமும் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் பார்ப்பதற்கு நிச்சயம் அப்படி தெரிய மாட்டார்கள். இவர்கள் விரும்பப்படுபவர்களாகவும், விரும்புபவர்களாகவும் இருந்தாலும், உயர்ந்த விருப்பங்களைக் கொண்ட இவர்கள், தங்களை மீட்டெடுத்துக் கொள்வதற்காகத் தனிமையை விரும்புகிறார்கள்.
அவர்கள் ஒருவர் மீது காதல் கொண்டிருக்கலாம், ஆனாலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல், கனவிலேயே தங்கள் காலத்தை கழித்து விடுவார்கள். இதனால் அவர்கள் உணவுகளை வெளிப்படுத்தாவிட்டாலும் அதை புரிந்து கொள்ளும் துணை கிடைக்கும் வரை சிங்கிளாகவே இருப்பார்கள். அதற்கு எத்தனை வருடமானாலும் காத்திருப்பார்கள்.
அனைத்து மாதத்திலும் 27 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த பிறந்த தேதி, கிரகங்களின் தளபதியான செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த தேதியில் பிறந்தவர்கள் தோழமை மற்றும் நட்பை விரும்புபவர்களாக இருந்தாலும், தங்கள் கனவு துணையை அடையும் வரை யாருடனும் காதல் உறவில் ஈடுபட அவர்கள் விரும்புவதில்லை. அதிக எதிர்பார்ப்புகளும், எதையும் சாதிக்கும் மனப்பான்மையும் கொண்ட இவர்கள், தங்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்காத யாரையும் காதலிப்பதை விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுடன் உறவுகளைத் துண்டிக்க அவர்கள் துளியும் தயங்க மாட்டார்கள்.
உறவுகளைத் துண்டிக்கும் இவர்களின் திறன் சிலருக்கு அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், இந்த நபர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். சரியான நபரை அவர்கள் கண்டறியும்போது, அவர்கள் சிறந்த பாதுகாவலராகவும், ஊக்கமளிப்பவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாறுகிறார்கள்.
அனைத்து மாதத்திலும் 31 ஆம் தேதி பிறந்தவர்கள்
அனைத்து மாதத்திலும் 31 ஆம் தேதியில் பிறந்தவர்கள் பொதுவாக வழக்கத்திற்கு மாறான பாதைகளில் பயணிப்பதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். அவர்களின் வயது அதிகரிக்கும் இது மேலும் அதிகரிக்கும். பாரம்பரிய விதிமுறைகளை மாற்றியமைக்கப் பிறந்த இவர்கள், தங்கள் காதல் வாழ்க்கையிலும் அதையே தொடர்கிறார்கள். தங்கள் எதிர்கால இலக்குகளுக்குப் பொருத்தமானவராகவும், தங்கள் கனவுகளுக்கு உத்வேகம் அளிப்பவராகவும் இருக்கும் ஒருவரை இவர்கள் விரும்புகிறார்கள். எனவே, இவர்கள் காதலில் அவசரப்பட மாட்டார்கள். மெதுவாகப் பழகும் இவர்கள், தங்கள் இலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவர் கிடைக்கும் வரை சிங்கிளாகவே இருப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












