Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் தெய்வீக சக்தியால் பாதுகாக்கப்படுபவர்களாம்... நீங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவமான ஆளுமை இருக்கும் என்று எண்கணிதம் கூறுகிறது. எண்கணிதத்தின்படி, சில குறிப்பிட்ட பிறந்த எண்கள் தெய்வீக சக்திகளால் பாதுகாக்கப்படுபவர்களாக இருப்பார்கள். அந்த தெய்வீக சக்திகள் அவர்களின் முன்னோர்களாகவோ, குல தெய்வமாகவோ அல்லது வேறு தெய்வமாக இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவர்கள் கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.
யாராவது அவர்களின் வாழ்க்கை, வேலை அல்லது மன அமைதியைக் கெடுக்கும் வகையில், மாந்திரீகம், கண் திருஷ்டி அல்லது தீய எண்ணங்கள் மூலம் தடைகளை ஏற்படுத்தினால், இந்த சக்திகள் அவர்களை நிச்சயம் பாதுகாக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தீய சக்திகளை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் தெய்வீக சக்திகளால் பதுக்கப்படுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து மாதத்திலும் 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்க்ளின் விதி எண் 1 ஆகும். இந்த எண்கள் கிரகங்களின் அதிபதியான சூரியனால் ஆளப்படுகின்றன. இவர்கள் சில தெய்வீக சக்திகளால் ஆன்மீகரீதியாகப் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்களின் சக்திவாய்ந்த ஆளுமையிலும், அவர்கள் பேசத் தொடங்கும் போது மற்றவர்கள் அதற்கு கட்டுப்படும் விதத்திலும் இதை நீங்கள் உணரலாம்.
அவர்களிடம் ஒரு தனித்துவமான ஒளிவட்டம் மற்றும் நேர்மறை அதிர்வுகள் உள்ளன. இதனால்தான் அனைவரும் அவர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் சந்திக்கும் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் அவர்கள் இந்த பாதுகாப்பு கவசமே அவர்களைப் பாதுகாக்கிறது.
அனைத்து மாதத்திலும் 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 2 ஆகும். இந்த எண்கள் சந்திரனால் ஆளப்படுகின்றன, இது ஒரு நீர் கிரகமாகும். இவர்கள் பெரும்பாலும் மனதின் காவலனாக அறியப்படும் சந்திரனால் வழிநடத்தப்படுகிறார்கள், மேலும் சந்திரனின் ஆற்றல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.
தன்னுடைய நெற்றியில் சந்திரனை அணிந்திருக்கும் சிவபெருமானின் ஆற்றலாலும் இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். இவர்கள் மிகவும் களங்கமற்ற இயல்புடையவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால், அந்த இரு சக்திகளும் இவர்களுக்கு பாதுகாப்பையும் ஆசீர்வாதங்களையும் வழங்குகின்றன.
அனைத்து மாதத்திலும் 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள், மேலும் அவர்கள் தைரியம், சக்தி மற்றும் மன வலிமை நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தெய்வீக சக்திகளால் பாதுகாக்கப்படுகிறார்கள், அந்த சக்திகள் அவர்களுக்கு ஒரு போர்வீரனின் ஆற்றலை அளிக்கின்றன.
அந்த ஆற்றல்கள் மூலம் மன வலிமையை பெறுவதன் மூலம் அவர்கள் தீய சக்திகள் மற்றும் பிற தீங்கிழைக்கும் ஆற்றல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இந்த தெய்வீக பாதுகாப்பு அவர்களுக்கு அச்சமின்மையையும், எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான உடல் வலிமையையும் அளிக்கின்றன, மேலும் அவர்களின் மறைமுக எதிரிகளிடமிருந்தும் பாதுகாக்கின்றன.
அனைத்து மாதத்திலும் 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கேது கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி கேது ஒரு நிழல் கிரகம் மற்றும் அது தனிமை, மர்மம் மற்றும் உள்ளுணர்வைக் குறிக்கிறது. இவர்கள் நேர்மறை மாய சக்திகளால் பாதுகாக்கப்படுகிறார்கள், இது அவர்களை ஒரு சக்திவாய்ந்த நபராக மாற்றுவதற்கான ஆற்றலை அளிக்கிறது. மேலும், அவர்களின் உள்ளுணர்வின் காரணமாக, அவர்கள் பொருள் இன்பங்களை விட ஆன்மீக உலகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
