Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
November Month Rasi Palan 2025: நவம்பர் மாதம் இந்த 5 ராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரும்..
November Month Rasi Palan 2025: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் பதினொன்றாவது மாதமான நவம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் நவம்பர் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.
உங்களுக்கு 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் நவம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என நவம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2025 நவம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் பல துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் இந்த மாதத்தில் கிடைக்கும். இதன் மூலம் உங்களின் நிலை சமூகத்தில் உயரும். நிதி ரீதியாக, இம்மாதம் சாதகமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகளும், தவறான புரிதல்களும் நீங்கும். பணியிடத்தில் நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். ஆனால் நிறைய செலவுகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் சூழ்நிலைகள் சற்று மோசமாக இருக்கும். தொழில் வாய்ப்புக்கள் குறையும். ஆரோக்கிய பிரச்சனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களின் பேச்சு பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இம்மாதத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க போதுமான அளவு நீரை அருந்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பல சாதனைகளைப் புரிவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் தனிப்பட்ட விஷயங்களில் சமரசம் செய்ய வேண்டியிருக்கும். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மாத இறுதியில் உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் இம்மாதம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு நாளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இருப்பினும், செலவு செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் பல மாற்றங்களை சந்திப்பீர்கள். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். இம்மாதத்தில் உணர்ச்சிபூர்வமாக பல முடிவுகளை எடுக்க நேரிடும். இம்மாற்றங்களால் பல மோசமான விளைவுகளையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இம்மாதம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் நன்றாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். முதலீடுகளில் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். வாழ்க்கையில் பல சந்தோஷமான மாற்றங்களைக் காண்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் சுயபரிசோதனை செய்யும் மாதமாக இருக்கும். பல எதிர்பாராத மாற்றங்களை சந்திப்பீர்கள். பல முக்கியமான வேலைகளை நேர்மையாக செய்து முடிப்பீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அசால்ட்டாக இருக்காதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கையில் மாற்றங்களைக் காண்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பெருமை பேசுவதற்கு பதிலாக, நல்ல செயல்களுக்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகள் அனைத்தும் தீரும். பல வழிகளில் இருந்து பணம் வரும். ஆனால் அந்த பணத்தை சரியாக செலவு செய்தால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் உங்கள் நீண்ட கால கனவுகள் நனவாகும். வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காண்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்க சற்று போராட வேண்டியிருக்கும். வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பணப்பிரச்சனையால் சிரமப்பட நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள். ஆயினும் ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், பலமுறை யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதலித்து வந்தால் இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











