Latest Updates
-
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்!
உங்க ராசி என்னனு சொல்லுங்க...நவம்பர் மாதம் நீங்க ராஜாவா இருப்பீங்களா இல்ல கஷ்டப்பட போறீங்களானு நாங்க சொல்றோம்!
November Month Horoscope 2024: நவம்பர் மாதத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் நிதிநிலையைப் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். நவம்பர் மாத கணிப்புகளைப் பற்றி நாம் பேசினால், அடுத்த 30 நாட்களுக்கு சில ராசிக்காரர்கள் நல்ல நிதி மாற்றங்களைச் சந்திக்கப் போகிறார்கள். அதேசமயம் சில ராசிக்காரர்கள், நிதிரீதியாக எதிர்மறையான முடிவுகளை சந்திக்கப் போகிறார்கள்.
நவம்பர் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் காத்திருக்கின்றன மற்றும் இழப்புகள் காத்திருக்கின்றன என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளுக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் அவர்கள் நிதி நிலையில் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் திட்டமிட்டு பணத்தை துல்லியமாக செலவழிக்கும் திறனையும் பெறுவார்கள். அனைத்து விதமான நிதி நன்மைகளும் அவர்களைத் தேடி வரும். பட்ஜெட்டை எல்லா வகையிலும் துல்லியமாக நிர்வகிக்கவும் முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் நிதி அடிப்படையில் பல சாதகமான மாற்றங்களைக் அனுபவிப்பார்கள். மேலும் பணம் சம்பாதிப்பதற்கான அவர்கள் ஆர்வம் அதிகாரிகம். மேலும், ஆடம்பரப் பொருட்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதனுடன் நீண்ட காலம் சேமிப்பில் ஆர்வம் செலுத்தவும் தொடங்குவார்கள்.
மிதுனம்
நிதி விஷயங்களில் மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் பெரும் பின்னடைவுகளைஸ் சந்திக்கப் போகிறார்கள். இது பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையை இந்த மாதம் மிகவும் கடினமாக மாற்றுகிறது. எதிர்பாராத செலவுகள் அதிகரிப்பதால், நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். மொத்தத்தில் நவம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு சோதனையான மாதமாக இருக்கப்போகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் பல சாதகமான நிதி மாற்றங்கள் உள்ளன. பெரும்பாலும் குடும்பத் தேவைகளுக்காக நிறைய பணம் செலவிடப்படும் சூழ்நிலை ஏற்படலாம். பணத்தை கவனமாகச் செலவு செய்யாவிட்டால், நிதி நெருக்கடிகள் அதிகரிக்கலாம், செலவழிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது மேலும் சவால்களை ஏற்படுத்தலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் நிதி விஷயங்களில் மிகவும் சாதகமான நேரமாக இருக்கும். பெரும்பாலும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் உங்கள் செல்வத்தின் மூலம் அடையும் சூழல் ஏற்படும். அழகுக்காக அதிகம் செலவு செய்யலாம். மேலும், நவம்பர் மாதம் அனைத்து நிதி நன்மைகளையும் தரும் மாதமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அது உங்களுக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு செலவையும் செய்யும் முன் இரண்டு முறை சிந்திக்கவும். இல்லையெனில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு பொருளுக்கும் பணம் செலவழிக்க கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு நவம்பர் மாதம் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும் மாதமாக இருக்கும். அவர்கள் பெரும்பாலும் நிதி விஷயங்களில் சாதகமான முடிவுகளைக் கொண்டுள்ளனர். வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் இருக்கும். உறவினர்களுக்கு பண உதவி செய்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் பணப் பலன்கள் வெகுவாக அதிகரிக்கும். இது பெரும்பாலும் வாழ்க்கையில் வரவிருக்கும் நிதிரீதியான சவால்களை எதிர்கொள்ள வழிவகுக்கிறது. இதனால் அனைத்து விஷயத்திலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். அவர்கள் இந்த மாதத்தில் எந்தவித நிதி பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள்.
தனுசு
நவம்பர் மாதம் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பொருளாதாரரீதியாக நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி பல வழிகளிலும் பணம் கையை விட்டுப் போகும் சூழல் ஏற்படும். இவை அனைத்தும் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். ஆடம்பரத்திற்காக பணத்தை செலவழிக்கும்போது கவனமாக இருங்கள்.
மகரம்
நவம்பர் மாதத்தில் மகர ராசிக்காரர்கள் நிதி விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், மேலும் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். ஒரு ரூபாய் செலவழித்தாலும் பிரச்சினை ஏற்படாத வகையில் கையாள வேண்டும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் நிறைய பணம் செலவழிக்கலாம். ஆனால் நீங்கள் செலவுகளை கவனமாகச் செய்யவில்லை என்றால், அது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலும் நிதி இழப்புகளைப் பற்றி முன்கூட்டியே யோசித்து அதிலிருந்து விடுபட திட்டமிடுவது நல்லது. எனவே சூழலை சரியாகப் புரிந்துகொண்டு முன்னேறுவது அவசியம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும் காலம் இது. அனைத்து விதமான சாதனைகளும் ஒன்று சேரும் காலம் நவம்பர் மாதம். நிதி ஸ்திரத்தன்மையை விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட அக்கறை காட்ட வேண்டும். அனைத்து முதலீடுகளும் கவனமாக செய்யப்பட வேண்டும். அது இல்லையெனில், நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
