Latest Updates
-
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
புதன் பெயர்ச்சியால் ஜூன் 06 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கப்போகுது..
Mercury Transit In Gemini On 06 June 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியும் ஆவார்.
புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது புதன் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஜூன் 06 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த மிதுன ராசியில் ஜூன் 22 ஆம் தேதி வரை இருப்பார். தனது சொந்த ராசியில் புதன் 15 நாட்கள் பயணிக்கவுள்ளார்.

இக்காலத்தில் புதனின் நிலை வலுவாக இருக்கும். புதன் சொந்த ராசிக்கு சென்றிருப்பதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக சில ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலில் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது மிதுன ராசிக்கு செல்லும் புதனால் தொழில் ரீதியாக நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த பெயர்ச்சியால் புதன் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்களையும் பெறுவார்கள். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், உயர்நிலையை அடையலாம். மேலும் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணப்பிரச்சனை எதுவும் இருக்காது. வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். அறிவாற்றல் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் கடினமான சூழ்நிலைகளிலும் திறம்பட முடிவெடுப்பீர்கள். நிதி நிலை அருமையாக இருக்கும். பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சுப செலவுகளை செய்ய நேரிடும். பணியிடத்தில் உங்களின் படைப்புத் திறனால் மற்றவர்களை ஈர்ப்பதோடு, முன்னேற்றத்தையும் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் புகழ் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் குரு பகவானும் இந்த வீட்டில் இருப்பதால், நிறைய நன்மைகள் கிடைக்கும். வீட்டில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல நன்மை கிடைக்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். புதிய நண்பர்களையும் பெறலாம். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டி, வேலையில் அடுத்த நிலைக்கு செல்வீர்கள். மொத்தத்தில் வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


