Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
Mercury Combust 2026: ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். சந்திரனுக்கு அடுத்தப்படியாக ஒரு ராசியில் குறுகிய நாட்களில் பயணிப்பதோடு, அவ்வப்போது வக்ர நிலையிலும், அஸ்தமன நிலையிலும் பயணிப்பார். எனவே புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது புதன் அஸ்தமன நிலையில் உள்ளார். இந்த அஸ்தமன நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை இருப்பார். புதன் இப்படி அஸ்தமன நிலையில் இருக்கும் போது பலவீனமாக இருப்பார். மேலும் பலவீனமாக இருக்கும் புதனின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். அலுவகலத்தில் உங்களின் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். நிறைய வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. வேலையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். இது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும். இக்காலத்தில் தொழிலில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக எந்த ஒரு விஷயத்தை மேற்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த நிதி பரிவர்த்தனைகளையும் இக்காலத்தில் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகள் எதையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் ஒப்பந்தங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆவணங்களை படிக்காமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சிம்மம்
புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் அல்லது உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களுக்கு எதிராக மற்றவர்கள் செயல்படலாம். எனவே அப்போது உடனடியாக அவசரப்பட்டு எதையும் செய்யாமல், அமைதியாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் தகராறுகளை பெரிதாக்கவோ அல்லது கவனக்குறைவாகவோ முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
