Latest Updates
-
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
பீர்க்கங்காய் வெச்சு இப்படி ஒருடைம் பருப்பு கறி செய்யுங்க.. சாதம், இட்லி, தோசைக்கும் செமயா இருக்கும்.. -
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப நெல்லிக்காயை இந்த 5 பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள இலட்சக்கணக்கில் மானியம் கொடுக்கும் நாடுகள் - டிக்கெட்டை உடனே போடுங்க -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரங்களை வெச்சு செய்யப்போகுது.. உஷார்..
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான ஆளுமையும், குணநலன்களும் இருக்கும். அதேபோல ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சில ராசிகளில் பிறந்த ஆண்கள் காதல் அல்லது சாகசங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள், ஆனால் சில ஆண்கள் பணத்தின் மீது தீவிர விருப்பமும், ஆசையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களுக்கு அனைத்தையும் விட பணமே மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதற்காக அவர்கள் பேராசை பிடித்தவர்களோ அல்லது தீய எண்ணம் கொண்டவர்களோ என்று அர்த்தமல்ல. மாறாக, அவர்களின் வாழ்க்கையில் பணம் மிக முக்கியாமான ஒன்றாக விளங்குகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் பணத்தாசை கொண்டவர்களாக விளங்குவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் குறிக்கோள்களிலும், எதார்த்த அணுகுமுறையிலும் உறுதியானவர்கள். பணத்தை கையாள்வதிலும், ஒன்றை நூறாக்குவதிலும் அவர்களுக்கு இயல்பான திறமை உண்டு. மகர ராசிக்காரர்கள் பணத்தை வெற்றி மற்றும் மரியாதையின் அடையாளமாகக் கருதுகிறார்கள். எனவே தங்கள் வாழ்க்கையில் நிதி நிலைத்தன்மையை அடைய இவர்கள் கடினமாக உழைப்பதோடு, பெரும்பாலும் தங்கள் தொழில் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். மகர ராசி ஆண்களைப் பொறுத்தவரை, பணம் என்பது அவர்களின் எதிர்காலம் மற்றும் அன்புக்குரியவர்களை பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும். எனவே அவர்கள் அதை குவிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி ஆண்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகிறார்கள். சுக்கிரனால் ஆளப்படும் இவர்கள், அழகான விஷயங்களின் மீது நாட்டம் கொண்டவர்கள் மற்றும் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் அனுபவிக்க விரும்புவார்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு, பணம் என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் உலக இன்பங்களை அடைவதற்கான ஒரே கருவியாகும். அவர்கள் ஒரு நிலையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க விரும்புவதால், பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ரிஷப ராசி ஆண்கள் நிதி விஷயங்களில் பொறுமையாகவும் உறுதியாகவும் இருப்பார்கள். அவர்கள் ரிஸ்க் எடுப்பதை விரும்புவதில்லை, ஆனால் கவனமாகச் சேமிப்பதையும் முதலீடு செய்வதையும் விரும்புகிறார்கள். ரிஸ்க் எடுத்து பணத்தை சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லாதவர்கள் இவர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி ஆண்களுக்கு எப்போதும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் மற்றும் அனைவரையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். அதை சாதிக்க ஒரே வழி பணம் சம்பாதிப்பதுதான் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் தீவிரமும் பேரார்வமும் பணம் தொடர்பான விஷயங்களிலும் வெளிப்படும். விருச்சிக ராசிக்காரர்கள் பண விஷயத்தில் புத்திசாலிகள், மேலும் தந்திரமான நகர்வுகள் மூலம் தங்கள் செல்வத்தை எப்படிப் பெருக்கும் கலையிலும் அவர்கள் கை தேர்ந்தவர்கள். விருச்சிக ராசி ஆண்களுக்குப் பணம் என்பது அதிகாரமும் சுதந்திரமும் ஆகும். அவர்கள் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள், ஏனெனில் அது அவர்களுக்குக் கட்டுப்பாட்டையும், தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கும் திறனையும் அளிக்கும் என்று அவர்கள் அறிவார்கள்.
கன்னி
கன்னி ராசி ஆண்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுபவர்கள் மற்றும் அனைத்து விஷயங்களிலும் தீவிர கவனம் செலுத்துபவர்கள். அவர்கள் தங்கள் நிதி விவகாரங்கள் உட்பட அனைத்தையும் கவனமாகத் திட்டமிட விரும்புகிறார்கள். தவறுகளைத் தவிர்க்கவும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கவும் அவர்கள் பண விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் கடின உழைப்பும் ஒழுக்கமான அணுகுமுறையும் அவர்களுக்கு நிலையான செல்வத்தை உருவாக்க உதவுகின்றன. கன்னி ராசி ஆண்கள் ஆடம்பரத்தை விரும்பாவிட்டாலும், பண விஷயங்களில் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். பணத்தைக் கையாள்வதில் அவர்கள் ஒரு சீரான அணுகுமுறையைக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாகவே எடுக்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

